13 போர்ஸ் 9 சிக்ஸ்.. ஃபார்முக்கு வந்துட்டேன்.. எனக்கு அந்த சான்ஸ் கொடுங்க.. கருண் நாயர் மறைமுக கோரிக்கை

Karun nair
- Advertisement -

கர்நாடகாவில் 2024 மகாராஜா டி20 கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் ஆகஸ்ட் 19ஆம் தேதி பெங்களூருவில் மங்களூரு டிராகன்ஸ் மற்றும் மைசூர் வாரியர்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மைசூர் அணி 20 ஓவரில் அதிரடியாக விளையாடி 226/4 ரன்கள் குவித்து அசத்தியது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் கருண் நாயர் அதிரடியாக விளையாடி சதமடித்தார். குறிப்பாக 8 ஓவரில் 61/2 என தனது அணி தடுமாறிய போது களமிறங்கிய அவர் சரவெடியாக விளையாடி 13 பவுண்டரி 9 சிக்சர்களை பறக்க விட்டு 124* (48) ரன்களை 258.33 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்தார். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த மங்களூரு அணி 14 ஓவரில் 138/7 ரன்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது.

- Advertisement -

இந்திய வாய்ப்பு:
அப்போது மழை வந்ததால் வி ஜெயதேவன் சிஸ்டம் முறைப்படி மைசூர் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. மங்களூர் அணிக்கு அதிகபட்சமாக கிருஷ்ணமூர்த்தி சித்தார்த் 50 ரன்கள் எடுத்த நிலையில் மைசூர் சார்பில் அதிகபட்சமாக ஜெகதீஷா சுஜித் மற்றும் அஜித் கார்த்திக் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இந்நிலையில் தற்போது சிறப்பாக விளையாடுவதாக உணர்வதாக அப்போட்டியின் ஆட்டநாயகன் கருணை நாயர் தெரிவித்துள்ளார்.

எனவே இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட விரும்புவதாக தெரிவிக்கும் அவர் அதற்காக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கருக்கு மறைமுகமான கோரிக்கையும் வைத்துள்ளார். இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் இதுவரை செய்ததைப் போலவே பேட்டிங் செய்வதாக உணர்கிறேன். நல்ல இடத்தில் இருக்கும் எனக்கு எனது ஆட்டம் எங்கே என்று தெரியும்”

- Advertisement -

“எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அது எங்கிருந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்துவேன். என்னால் மீண்டும் படிக்கட்டுகளில் ஏற முடியும். ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டும் என்று கனவு காண்கிறேன் என்பது உற்சாகமாக இருக்கிறது. கடந்த ரஞ்சிக் கோப்பையை தவற விட்டதால் இந்த கோப்பையை வென்று ஈடுகட்ட விரும்புகிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: சீட், பாத்ரூம் கூட இல்லை.. 500மீ மாதிரி இருக்கு.. பாகிஸ்தானின் அவலத்தை ஒப்புக்கொண்ட வாரிய தலைவர் கவலை

முன்னதாக 2016ஆம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுகமான கருண் நாயர் சென்னையில் நடைபெற்ற போட்டியில் சேவாக்கிற்கு பின் முச்சதம் அடித்து 303* ரன்கள் விளாசி சாதனை படைத்தார். ஆனால் அதன் பின் மொத்தமாக 6 போட்டிகளில் விளையாடிய அவர் 374 ரன்கள் மட்டுமே எடுத்தார். அந்த வகையில் கடைசி 5 போட்டிகளில் வெறும் 74 ரன்கள் மட்டுமே எடுத்ததால் அவர் கழற்றி விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement