இவரால இந்திய அணிக்கே ஆபத்து ஏற்படப்போகுது. என்ன நடக்குமோ – சுனில் கவாஸ்கர் ஓபன்டாக்

Gavaskar
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்னும் சில நாட்களில் நடப்பு 14-வது ஐபிஎல் தொடரானது முடிவடைய இருக்கிறது. அதன் பின்னர் அங்கு ஐசிசி நடத்தும் ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து அணிகளும் ஏற்கனவே தயார் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட நிலையில் இந்திய அணியும் இந்த தொடருக்கான தங்களது வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் சில வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டும், சில வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் உள்ளன.

IND

- Advertisement -

இதனால் இந்திய அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கப் போகிறது ? என்ற எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது. அதுமட்டுமின்றி தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் பலர் பார்ம் அவுட்டில் இருக்கும் இவ்வேளையில் இந்திய வீரர்களின் செயல்பாடு உலக கோப்பை தொடரில் எவ்வாறு இருக்கப்போகிறது என்பது குறித்த பல்வேறு கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் உலாவி வருகின்றன.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் டி20 உலகக் கோப்பையின் போது ஹர்திக் பாண்டியாவால் இந்திய அணி பாதிப்பை சந்திக்கும் என்று கூறியுள்ளார். இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பந்து வீசாமல் இருந்து வருகிறார். அது மும்பை அணிக்கு மட்டுமில்லாமல் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

pandya 1

இது குறித்து அவர் கூறுகையில் : ஹர்திக் பாண்டியா பந்து வீசாதது மும்பை அணிக்கு பெரிய இழப்பு அதேபோன்று அது இந்திய அணிக்கும் பெரிய இழப்பு தான். ஏனெனில் ஆல்-ரவுண்டராக ஹர்டிக் பண்டியா ஆறாவது ஏழாவது இடத்தில் இறங்கும்போது நிச்சயம் அவர் பந்துவீசியே ஆக வேண்டும். அப்படி பந்து வீசாமல் அவர் அணியில் நீடிப்பது என்னை பொருத்தவரை கஷ்டம் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : வருண் சக்கரவர்த்தியின் உடற்தகுதியில் பிரச்சனை உள்ளது – பி.சி.சி.ஐ அறிக்கை (என்ன ஆனது ?)

தொடர்ந்து பேசிய அவர் : இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்றால் அவரது பவுலிங் மிகவும் அவசியம் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். ஏற்கனவே ஹர்டிக் பாண்டியா குறித்து பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு வரும் வேளையில் ஷர்துல் தாகூர் ஆல்-ரவுண்டராக விளையாட வைக்கலாம் என்ற ஒரு பேச்சும் சமூகவலைதளத்தில் அதிகம் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement