வருண் சக்கரவர்த்தியின் உடற்தகுதியில் பிரச்சனை உள்ளது – பி.சி.சி.ஐ அறிக்கை (என்ன ஆனது ?)

Varun
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் தொடருக்கு பின்னர் அடுத்த சில நாட்களில் உலகக் கோப்பை டி20 தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்திய அணியும் தங்களது வீரர்கள் பட்டியலை இந்த மாத துவக்கத்தில் அறிவித்தது. அதில் தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி முக்கிய வீரராக இடம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வருன் சக்ரவர்த்தி அதனைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு அறிமுகமானார்.

Varun

- Advertisement -

பின்னர் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும் தனது அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருன் சக்ரவர்த்தி நிச்சயம் உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 26 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள வருன் சக்ரவர்த்தி 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி ஓவருக்கு 7 ரன்களுக்கும் குறைவாக விட்டுக் கொடுக்கும் இவரது பந்துவீச்சு நிச்சயம் இந்திய அணிக்கு முக்கிய ஒன்றாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக கோப்பை தொடரின் முதல் போட்டியாக இந்திய அணி வரும் அக்டோபர் 24ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில் தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் வருண் சக்கரவர்த்திக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் : வருண் சக்கரவர்த்தியின் முழங்கால் தற்போது நல்ல நிலையில் இல்லை. அவர் அவ்வப்போது வலியை உணர்கிறார். டி20 உலகக் கோப்பைக்கு முன்னர் அனைத்து வீரர்களும் நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டியது அவசியம்.

varun 2

அந்த வகையில் நாங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதுவரை வருண் சக்கரவர்த்தி 100 சதவீத உடல் தகுதியுடன் இல்லை. இருப்பினும் உலக கோப்பை தொடருக்கு முன்னர் இன்னும் நாட்கள் இருப்பதனால் அவரது காயத்திற்கான தன்மை பரிசோதிக்கப்பட்டு வரும் என்றும் நிச்சயம் கொல்கத்தா அணியும் வருண் சக்கரவர்த்தியின் இந்த நிலைமையை கண்காணிப்பார்கள் என்று பிசிசிஐ மருத்துவ குழு கருத்து தெரிவித்துள்ளது.

- Advertisement -

varun 1

மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டதாவது : தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் அதில் வருன் சக்கரவர்த்தி காயத்தின் தன்மை பெரியதாக இல்லை என்றாலும் அவ்வப்போது அவர் வலியை உணர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெயின் கில்லர் ஊசி போட்டால் நிச்சயம் அவரால் போட்டியில் 4 ஓவர்கள் வீச முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மும்பை அணிக்கெதிராக நாங்க 90 ரன்னில் சுருண்டு மோசமாக தோக்க இதுவே காரணம் – சஞ்சு சாம்சன் வேதனை

உலக கோப்பை தொடர் வரவில்லை என்றால் நிச்சயம் வருண் சக்ரவர்த்திக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு மீண்டும் இந்திய அணியில் இணைக்கப்பட்டு இருப்பார். ஆனால் உலக கோப்பை தற்போது அருகில் வந்து உள்ளதால் அவர் சரியான முறையில் தயாராக வேண்டும் எனவே இந்த ஐபிஎல் தொடரில் அவர் பீல்டிங் செய்யும்போது டைவ் அடித்து பீல்டிங் செய்ய கூடாது எனவும் மருத்துவ குழு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement