மும்பை அணிக்கெதிராக நாங்க 90 ரன்னில் சுருண்டு மோசமாக தோக்க இதுவே காரணம் – சஞ்சு சாம்சன் வேதனை

samson

ஐபிஎல் தொடரின் 51 ஆவது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது மும்பை அணி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 90 ரன்களை மட்டுமே குவித்தது.

mivsrr

அதிகபட்சமாக லீவிஸ் 24 ரன்களும், டேவிட் மில்லர் 15 ரன்களை மட்டுமே குவித்தனர். அதன் பின்னர் 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணியானது அதிரடியாக விளையாடி முன்கூட்டியே போட்டியை முடிந்தால் ரன்ரேட் அதிகரிக்கும் என்கிற காரணத்தினால் துவக்கம் முதலே அதிரடி காண்பித்தது. அதன்படி 8.2 ஓவர்களில் மும்பை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் : இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது மிக சவாலாக இருந்தது. முதல் இன்னிங்ஸ் முழுவதுமே பேட்டிங் செய்ய மிகவும் கஷ்டப்பட வேண்டியதாக இருந்தது. அபுதாபி போன்ற நல்ல பேட்டிங் மைதானத்திலிருந்து நாங்கள் ஷார்ஜா மைதானத்திற்கு வந்து விளையாடியது பெரிய அளவு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

mi 1

இந்த போட்டியில் எங்களது பேட்ஸ்மேன்கள் மீது எந்தவித எந்தவித பழியையும் நான் சுமத்த விரும்பவில்லை. ஏனெனில் மமைதானத்தின் தன்மையால் எங்களால் முதல் இன்னிங்ஸில் சரிவர பேட்டிங் செய்ய முடியாமல் போனது அதுவே தோல்விக்கு காரணம். அபுதாபி போன்ற பேட்டிங்க்கு சாதகமான ஆடுகளத்தில் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்து விட்டு திடீரென சார்ஜா மைதானத்தில் பேட்டிங்க்கு எதிரான ஆடுகளத்தில் விளையாடுவது என்பது சாதாரணமானதல்ல. எனவே நிச்சயம் பேட்ஸ்மேன்கள் மீது எந்தவித தவறும் கிடையாது.

- Advertisement -

இதையும் படிங்க : இப்போதைக்கு பர்பெக்ட் டி20 பிளேயர் என்றால் அது இவர்தான் – இந்திய வீரரை பாராட்டிய மைக்கல் வாகன்

மைதானத்தின் தன்மையை அறிந்து அதற்கேற்றார் போல் விளையாடி இருக்கவேண்டும். நிச்சயம் இந்த தவறை நாங்கள் அடுத்த போட்டியில் செய்ய மாட்டோம். அடுத்த போட்டியில் இதை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று நம்புகிறேன். மும்பை அணி இவ்வாறு வலுவாக திரும்பும் என்பது நாங்கள் நினைத்த ஒன்றுதான்.

அவர்கள் பவர் பிளே ஓவர்களிலேயே அதிரடி காட்ட திட்டமிட்டு அதற்கேற்றார்போல் பேட்டிங் செய்தனர். முதல் இன்னிங்சை விட இரண்டாவது இன்னிங்சில் பேட்ஸ்மேன்களுக்கு மைதானம் உதவி புரிந்ததால் அவர்களால் எளிதாக வெற்றி பெற முடிந்தது என்று சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement