கடந்த 6 மாசமா இதே பேச்சு தான் அதிகமா இருந்துச்சி. கோலியின் பதவி விலகல் குறித்து – சுனில் கவாஸ்கர் பேட்டி

Gavaskar
- Advertisement -

கிரிக்கெட் உலகில் தற்போது பரபரப்பாக பேசப்படும் விடயமாக கேப்டன் விராத் கோலியின் பதவி விலகல் சம்பவம் மாறியுள்ளது. டி20 உலககோப்பை தொடர் அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில் அந்த அணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தவுள்ள விராட் கோலி அந்த உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன் டி20 கிரிக்கெட்டின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் அவரின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kohli

- Advertisement -

விராட் கோலி தனது இந்த முடிவினை நெருக்கமான நபர்களான ரவிசாஸ்திரி மற்றும் ரோஹித் ஆகியோருடன் கலந்து ஆலோசித்த பின்னரே எடுத்ததாகவும் கூறிவிட்டார். சர்வதேச கிரிக்கெட்டில் பணிச்சுமை காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அதுமட்டுமின்றி அவர் பேட்டிங்கில் போகஸ் செய்ய வேண்டும் என்பதாலே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் விராட் கோலியின் இந்த பதவி விலகல் குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் கோலியின் அறிவிப்பை படித்தேன். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், அவர் எடுத்த இந்த முடிவை பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

gavaskar

கடந்த 6 மாதங்களாகவே ஒயிட் பால் கேப்டன்சியில் மாற்றம் இருக்க வேண்டும் என பலரும் பேசி வந்தனர். மேலும் பி.சி.சி.ஐ மற்றும் தேர்வுக் குழுவினர் ஆகியோர் கோலியின் ஒயிட் பால் கேப்டன்சியில் இம்ப்ரஸ் ஆகவில்லை. அதனாலே அவர் தற்போது இந்த கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய தயாராகியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கோலி தொடர்ந்து கேப்டனாக செயல்படுவதாக அறிவித்துள்ளார்.

kohli

ஆனால் அடுத்து தேர்வுக் குழுவினர் ஒருநாள் போட்டியின் கேப்டன்சி மாற்றம் குறித்தும் யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்குவது கடினம். டி20 கிரிக்கெட்டை போன்று நிச்சயம் ஒருநாள் கிரிக்கெட்டிலும் கேப்டன் மாற்றம் விரைவில் வரும் எனவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement