இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் விராட் கோலி இப்படி சொதப்புவதற்கு இதுவே காரணம் – சுனில் கவாஸ்கர் பேட்டி

Gavaskar
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை 2 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றி நிலையில் இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

INDvsWI

- Advertisement -

இந்த போட்டியில் ஏற்கனவே இந்திய அணி தொடரை கைப்பற்றி இருந்தாலும் முன்னாள் கேப்டனான விராட் கோலியின் செயல்பாடு மோசமாக இருந்து வருகிறது. முதல் 2 போட்டிகளிலும் விளையாடிய அவர் 8 ரன்கள் மற்றும் 18 ரன்கள் என மொத்தமாக 26 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். அதோடு கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய கோலி பேட்ஸ்மேனாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் இப்படி தொடர்ச்சியாக சொதப்புவது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக துவங்கிய 3-வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்தபோது கோலி 2 பந்துகளை மட்டுமே சந்தித்து டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார்.

Kohli

இதன் காரணமாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மொத்தமாகவே அவர் 26 ரன்கள் மட்டுமே குவித்து தனது மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இப்படி விராட் கோலி தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த என்ன காரணம் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் போட்டியின் போது கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை. ஆனால் விராட் கோலிக்கு கடந்த பல போட்டிகளாகவே நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. அவர் தற்போது ஃபார்மில் இல்லை என நினைக்கிறேன். அதேநேரம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற தொடரில் அவர் அரைசதம் அடித்ததை மறந்திடக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக விலை போகக்கூடிய டாப் 5 வீரர்கள் இவர்கள்தான் – ஷேன் வாட்சன் தேர்வு

ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சதம் அடிக்காமல் தவித்து வரும் விராட் கோலி இந்த தொடரிலாவது சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் கோலி இப்படி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement