ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக விலை போகக்கூடிய டாப் 5 வீரர்கள் இவர்கள்தான் – ஷேன் வாட்சன் தேர்வு

Watson
Advertisement

ஐபிஎல் 2022 தொடருக்கான மெகா வீரர்கள் ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 590 வீரர்கள் பங்கேற்க உள்ளதால் இந்த ஏலத்துக்காக உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Ipl cup

கடைசியாக கடந்த 2018க்கு பின் முதல் முறையாக மெகா அளவில் நடைபெற உள்ள இந்த ஏலத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப் வாயிலாக ரசிகர்கள் நேரடியாக கண்டு களிக்கலாம்.

- Advertisement -

வாட்சனின் டாப் 5:
இந்த ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல நட்சத்திர வீரர்கள் பெரிய தொகைக்கு ஏலம் போவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் அதிக விலைக்கு போகக்கூடிய டாப் 5 வீரர்களை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் தேர்வு செய்துள்ளார். இதுபற்றி ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதில் அவர் கூறிய விவரங்களை இப்போது பார்ப்போம்.

Watson-1

1. டேவிட் வார்னர்: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் இந்த பட்டியலில் முதல் வீரராக ஷேன் வாட்சன் தேர்வு செய்துள்ளார். சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற தன்னை நிரூபித்துள்ள டேவிட் வார்னர் இந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என ஷேன் வாட்சன் கேட்டுக்கொண்டுள்ளார்.

- Advertisement -

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக கடந்த 2015 முதல் ஒவ்வொரு சீசனிலும் 500க்கும் மேற்பட்ட ரன்களை விளாசிய அவர் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை ஆரஞ்சு தொப்பிகளை வென்ற வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். அத்துடன் 2016 ஆம் ஆண்டு கேப்டனாக அந்த அணிக்கு சாம்பியன் பட்டத்தையும் பெற்றுக் கொடுத்தார். எனவே அதிரடியாக விளையாடும் தன்மையும் கேப்டன்ஷிப் அனுபவமும் கொண்ட டேவிட் வார்னர் இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போவார் என வாட்சன் குறிப்பிட்டுள்ளார்.

warner

2. மிட்சேல் மார்ஷ்: ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் இந்தப் பட்டியலில் 2வதாக ஷேன் வாட்சன் தேர்வு செய்துள்ளார். கடந்த 2 வருடங்களாக ஆஸ்திரேலியா மற்றும் அனைத்து விதமான டி20 போட்டிகளில் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் அவர் அபாரமாக செயல்பட்டதாக வாட்சன் பாராட்டியுள்ளார். கடந்த வருடம் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 50 பந்துகளில் 77* ரன்கள் குவித்த மிச்செல் மார்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலியா ஒரு டி20 உலகக் கோப்பையை முத்தமிட முக்கிய பங்காற்றினார். இதன் காரணமாக டி20 உலக கோப்பை பைனலில் ஆட்டநாயகன் விருது வென்ற அவர் இந்த ஐபிஎல் ஏலத்தில் பெரிய தொகைக்கு வாங்க படுவார் என வாட்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

3. ஷ்ரேயஸ் ஐயர்: இந்தியாவின் வளர்ந்து வரும் நட்சத்திர இளம் வீரர் ஸ்ரேயாஸ் அய்யரை இந்த பட்டியலில் 3வதாக ஷேன் வாட்சன் தேர்வு செய்துள்ளார். தனது திறமையால் அனைவரையும் கவர்ந்துள்ள ஷ்ரேயஸ் ஐயர் கேப்டன்ஷிப் செய்வதற்கான தகுதிகளை பெற்றுள்ளதாகவும் வாட்சன் பாராட்டியுள்ளார். அவர் கூறுவது போல இதற்கு முன் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக அபாரமாக கேப்டன்ஷிப் செய்து இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்ற பெருமையை ஷ்ரேயஸ் ஐயர் பெற்றுள்ளார். எனவே இவரை தங்கள் அணிக்கு கேப்டனாக நியமிக்க பெங்களூரு, பஞ்சாப், கொல்கத்தா போன்ற அணிகள் முடிவெடுத்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் கூறுகின்றன.

iyer

4. யூஸ்வென்ற சஹால்: இந்தியாவை சேர்ந்த நம்பிக்கை நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் யூஸ்வென்ற சஹால் இந்தப் பட்டியலில் 4வது வீரராக ஷேன் வாட்சன் குறிப்பிட்டுள்ளார். மிடில் ஓவர்களில் அபாரமாக பந்து வீசி முக்கிய விக்கெட்டுகளை எடுக்கும் வல்லமை பெற்றுள்ள லெக் ஸ்பின்னர் சஹாலை வாங்க அனைத்து அணிகளும் போட்டி போடும் என நம்புவதாக ஷேன் வாட்சன் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

5. காகிஸோ ரபாடா: பவர்ப்ளே, மிடில் மற்றும் இறுதி கட்டம் என போட்டியின் எந்த ஒரு இடத்திலும் சிறப்பாக பந்து வீசும் திறமையை தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா பெற்றுள்ளார் என வாட்சன் குறிப்பிட்டுள்ளார். எனவே இவரையும் ஏலத்தில் வாங்க அனைத்து அணிகளீடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

RABADA

இது மட்டுமல்லாமல் பல திறமையான வீரர்கள் இந்த ஏலத்தில் பெரிய அளவில் கவனம் ஈப்பார்கள் என்பதால் ஐபிஎல் ஏலத்துக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாக ஷேன் வாட்சன் கூறியுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் ரூபாய் 9.5 கோடிகளுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட ஒப்பந்தமான ஷேன் வாட்சன் அந்த

Advertisement