- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணி செய்த இந்த தவறினால் தான் 2019 உலககோப்பையை இழந்தது – சுனில் கவாஸ்கர் வெளிப்படை

தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது ஐ.சி.சி சார்பில் நடத்தப்பட்ட 3 ஐ.சி.சி கோப்பையை வென்றார். 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர், அதற்கடுத்து இரண்டு ஆண்டுகளில் 2011 அம ஆண்டு 50 ஓவர் ஒரு நாள் உலக கோப்பை மற்றும் 20131 ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் கோப்பை என அனைத்து ஐ.சி.சி நடத்திய கோப்பைகளையும் வென்றுள்ளார்.

2016 ஆம் ஆண்டிலிருந்து விராட் கோலி கேப்டனாக இருந்து வருகிறார். இவரது தலைமையில் இந்திய அணி இருநாட்டு தொடர்களில் அபாரமாக செயல்பட்டாலும் ஐசிசி தொடர்களில் தொடர்ந்து சொதப்பி தான் வருகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது.

- Advertisement -

2018 இல் நடந்த டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு சென்று தோல்வியடைந்தது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை தொடரை விராட் கோலியின் தலைமையிலான அணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அதிலும் அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது.

இந்நிலையில் சென்ற வருட உலக கோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்று போட்டிகளில் சிறப்பாக விளையாடியும் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்துப் பேசியிருக்கிறார் சுனில் கவாஸ்கர். அவர் கூறுகையில்…

- Advertisement -

இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் மிகவும் அபாரமான பேட்ஸ்மேன்கள். முதல் மூன்று பேர் களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடுபவர்கள். இதன் காரணமாக நான்காவது வீரர் கடந்த சில வருடங்களாகவே ஆடுகளத்தில் நீண்ட நேரம் நின்று விளையாட முடியாத சூழ்நிலை இருந்தது. இதன் காரணமாக நாம் சரியான வீரரை தேர்வு செய்யவில்லை.

உலக கோப்பையிலும் இதே பிரச்சனை நீடித்தது. ஒரு நிலைத்த நான்காம் நிலை வீரர் இல்லாததன் காரணமாக உலக கோப்பை தொடரையே நாம் இழந்தோம் என்று தெரிவித்துள்ளார் சுனில் கவாஸ்கர். இதே கருத்தினை கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது. எனினும் அடுத்து வரும் ஐ.சி.சி கோப்பைகளை இந்திய அணி குறிவைக்கும் என்பதில் ஐயமில்லை.

- Advertisement -
Published by