தோனியை குறை சொன்ன.. கம்பீர் மாதிரி.. ஸ்ரேயாஸ் ஐயர் க்ரெடிட்டை பாண்டிங் வாங்கல.. கவாஸ்கர் பேட்டி

Sunil Gavaskar
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதைத் தொடர்ந்து தலா 17 புள்ளிகளை பெற்ற பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளும் பிளே ஆஃப் தகுதி பெற்றுள்ளன. அதில் பஞ்சாப் அணி 2014க்குப்பின் 11 வருடங்கள் கழித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.

அந்த வெற்றிக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முக்கிய காரணமாக திகழ்கிறார் என்பதில் சந்தேகமில்லை. 2020ஆம் ஆண்டு டெல்லியை முதல் முறையாக இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்ற அவரது தலைமையில் கடந்த வருடம் கொல்கத்தா கோப்பையை வென்று சாதனை படைத்தது. கடைசியாக 2014ஆம் ஆண்டு கோப்பையை வென்ற கொல்கத்தா அவரது தலைமையில் 10 வருடங்கள் கழித்து 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை முத்தமிட்டது.

- Advertisement -

தோனியை குறை சொன்ன கம்பீர்:

ஆனால் அதற்கு கௌதம் கம்பீர் தான் காரணம் என்று அந்த அணியைச் சேர்ந்த பல ரசிகர்கள் கொண்டாடினர். ஏனெனில் 2012, 2014 ஆகிய ஐபிஎல் கோப்பைகளை கௌதம் கம்பீர் தலைமையில் கொல்கத்தா வென்றது. அப்படிப்பட்ட அவர் 2022, 2023 வருடங்களில் லக்னோ அணியின் ஆலோசகராக செயல்பட்டார். இருப்பினும் அவரது மேற்பார்வையில் லக்னோ கோப்பையை வெல்லவில்லை.

அதைத் தொடர்ந்து 2024இல் கொல்கத்தா அணி ஆலோசகராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அவரது வழி காட்டுதலில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அபாரமாக விளையாடிய கொல்கத்தா கோப்பையை வென்று அசத்தியது. அந்த வெற்றிக்கு கௌதம் கம்பீர் தான் முக்கிய காரணம் என்று கொல்கத்தா ரசிகர்களைப் போல பிசிசிஐயும் கருதியது. அதனாலேயே அவரை தற்போது பிசிசிஐ இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளராக நியமித்துள்ளது.

- Advertisement -

கவாஸ்கர் சாடல்:

முன்னதாக 2011 உலகக் கோப்பை வென்றதற்கான பாராட்டுகளை அனைவரும் தோனிக்கு மட்டுமே கொடுப்பதாக கௌதம் கம்பீர் பலமுறை விமர்சித்துள்ளார். அப்படிப்பட்ட அவர் 2024 ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா வென்றதற்கான பாராட்டுகளைப் பெற்றதாக சுனில் கவாஸ்கர் மறைமுகமாக விமர்சித்துள்ளார். ஆனால் பஞ்சாப் அணியில் ஸ்ரேயாஸ் பாராட்டுகளை பயிற்சியாளர் பாண்டிங் பெறவில்லை என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 839 ரன்ஸ்.. ஏபிடி – கோலிக்கு நிகராக.. தவான் – பிரிதிவியை மிஞ்சிய கில் – சுதர்சன் ஜோடி 2 வரலாற்று சாதனை

இது பற்றி கவாஸ்கர் பேசியது பின்வருமாறு. “கடந்த ஐபிஎல் கோப்பையை வென்றதற்கான பாராட்டுக்கள் ஸ்ரேயாஸ் ஐயருக்கு கிடைக்கவில்லை. இந்தப் பாராட்டுக்கள் அனைத்தும் வேறு ஒருவருக்கு சென்றது. பொதுவாக களத்திற்கு சென்று அனைத்தையும் நிர்வகித்து விளையாடும் கேப்டன் தான் வெற்றியில் முக்கிய பங்காற்றுபவர். பெவிலியனில் உட்கார்ந்திருப்பவர் கிடையாது. இருப்பினும் இந்த வருடம் பஞ்சாப் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் போதுமான பாராட்டைப் பெறுகிறார். யாரும் ரிக்கி பாண்டிங்க்கு பாராட்டு கொடுக்கவில்லை” என்று கூறினார்.

Advertisement