839 ரன்ஸ்.. ஏபிடி – கோலிக்கு நிகராக.. தவான் – பிரிதிவியை மிஞ்சிய கில் – சுதர்சன் ஜோடி 2 வரலாற்று சாதனை

Sai Sudharsan Shubman Gill
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 18ஆம் தேதி தலைநகர் டெல்லியில் 60வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டெல்லியை 10 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்த குஜராத் பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. அப்போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அதிகபட்சமாக ராகுல் சதமடித்து 112* ரன்கள் எடுத்த உதவியுடன் 200 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதைத் துரத்திய குஜராத்துக்கு கேப்டன் சுப்மன் கில் 93*, தமிழக வீரர் சாய் சுதர்சன் சதத்தை அடித்து 108* ரன்கள் விளாசி 19 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். இதையும் சேர்த்து 9 வெற்றிகளைப் பெற்ற குஜராத் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. மேலும் பஞ்சாப், பெங்களூரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

- Advertisement -

சாதனை ஜோடி:

முன்னதாக இந்த வருடம் சுப்மன் கில் – சாய் சுதர்சன் ஆகியோர் ஆரம்பம் முதலே குஜராத்துக்கு பெரிய ரன்கள் குவித்து வருகிறார்கள். அந்த வகையில் இதுவரை அவர்கள் இருவரும் சேர்ந்து 12 போட்டிகளில் மொத்தம் 839* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். இதன் வாயிலாக ஒரு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற வரலாற்று சாதனையை அவர்கள் படைத்துள்ளனர்.

இதற்கு முன் 2021 ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக பிரிதிவி ஷா – ஷிகர் தவான் ஆகியோர் 744 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். இது போக ஏற்கனவே கடந்த 2024ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் சாய் சுதர்சன் – சுப்மன் கில் 210 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தற்போது இந்தப் போட்டியில் 205 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளார்கள்.

- Advertisement -

கில் – சுதர்சன்:

இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 2 முறை 200+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் இந்திய ஜோடி என்ற வரலாற்றையும் அவர்கள் படைத்துள்ளார்கள். இதற்கு முன் பெங்களூரு அணிக்காக விராட் கோலி மற்றும் ஏபி டீ வில்லியர்ஸ் மட்டுமே 2 முறை 200+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக ஐபிஎல் தொடரில் கில் – சுதர்சன் ஜோடி இந்த அட்டகாசமான சாதனையைப் படைத்துள்ளது.

இதையும் படிங்க: 14 வயசை பாக்கல.. அவரோட திறமையை தான் பாக்குறேன்.. தனது ஓப்பனிங் இடத்தை வழங்கியது குறித்து – சாம்சன் பேட்டி

இது போக ஐபிஎல் தொடரில் டெல்லிக்கு எதிராக 200+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் ஓப்பனிங் ஜோடி என்ற சாதனையையும் அவர்கள் படைத்துள்ளார்கள். அவர்களுடைய சிறப்பான ஆட்டத்தால் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக குஜராத் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மொத்தத்தில் இந்த வருடம் கோப்பையை வெல்லும் முனைப்புடன் குஜராத் கலக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement