நீங்க இதை செஞ்சா என் மனசு கஷ்டப்படும்.. அப்படி செய்யாதீங்க.. பண்ட் மீது பாசத்தை பொழிந்த கவாஸ்கர்

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 33வது லீக் போட்டியில் டெல்லியை 67 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோற்கடித்தது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 266/7 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 89, அபிஷேக் சர்மா 46, அப்துல் சமத் 59* ரன்கள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து 277 ரன்களை துரத்திய டெல்லிக்கு பிரித்வி ஷா, டேவிட் வார்னர், ட்ரிஷன் ஸ்டப்ஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறினர். அதனால் ஜேக் ப்ரேஷர்-மெக்குர்க் 65, அபிஷேக் போரேல் 42, கேப்டன் ரிஷப் பண்ட் 44 ரன்கள் எடுத்தும் 19.1 ஓவரில் டெல்லியை 199 ரன்களுக்கு சுருட்டி வெற்றி கண்ட ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர் நடராஜன் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

கவாஸ்கரின் பாசம்:
அதனால் 7 போட்டிகளில் 5வது வெற்றியை பதிவு செய்த ஹைதராபாத் புள்ளிப்பட்டியலில் சென்னை, கொல்கத்தா அணிகளை முந்தி 2வது இடத்திற்கு முன்னேறி அசத்தியது. மறுபுறம் 8 போட்டிகளில் 5வது தோல்வியை பதிவு செய்த டெல்லி 7வது இடத்திற்கு சரிந்தது. முன்னதாக இந்தப் போட்டியில் 6 ஓவரில் 125/0 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த ஹைதராபாத் 300 ரன்கள் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடைசி 5 ஓவர்களில் ஓரளவு நன்றாக செயல்பட்ட டெல்லி அந்த அணியை 266 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. அதனால் 267 ரன்களை சேசிங் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட டெல்லி அணியும் ஆரம்பத்தில் அதிரடியான துவக்கத்தை பெற்றது. இருப்பினும் கடைசி நேரத்தில் நடராஜன் துல்லியமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை எடுத்ததால் டெல்லி பரிதாபமாக தோற்றது.

- Advertisement -

இந்த தோல்வியால் போட்டி முடிந்ததும் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் தனது தலையை தொங்கப் போட்டுக்கொண்டு மிகவும் சோகத்துடன் பேட்டி கொடுக்க வந்தார். அப்போது வர்ணனையாளராக பேசிய முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியது பின்வருமாறு. “நான் எப்போதும் உங்களுடைய தலை கீழே குனிவதை பார்க்க விரும்பவில்லை. இங்கே நிறைய போட்டிகள் இருக்கிறது. எனவே தொடர்ந்து சிரியுங்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க: பிட்சை பாத்து தப்பா கணக்கு போட்டுட்டேன்.. நான் பண்ண தப்பு தான் தோல்விக்கு காரணம் – ஒப்புக்கொண்ட ரிஷப் பண்ட்

குறிப்பாக கார் விபத்தில் சிக்கி மிகப்பெரிய காயத்திலிருந்து குணமடைந்து விளையாடும் ரிஷப் பண்ட் இந்த ஒரு தோல்விக்காக தலை குனியக்கூடாது என்று அக்கறையுடன் சொன்ன கவாஸ்கர் பாசத்தை பொழிந்தார். அதற்கு ரிசப் பண்ட் பதிலளித்தது பின்வருமாறு. “நன்றி. நான் என்னுடைய சிறந்த செயல்பாடுகளை கொடுக்க முயற்சிக்கிறேன் சார்” என்று புன்னகை முகத்துடன் கூறினார்.

Advertisement