இந்திய அணியின் அடுத்த கேப்டனாக மாறுவதற்கு இவர் சரியாக இருப்பார் – இளம்வீரரை ஆதரித்த கவாஸ்கர்

gavaskar
- Advertisement -

இந்திய அணியில் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு அடுத்த கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வருகிறார். மூன்று வகையான கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி மிகச் சிறப்பாகவும், திறமையாகவும் இந்திய அணியை வழிநடத்தி வந்தாலும் அவரால் ஐசிசி கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற குறை மட்டும் உள்ளது. மேலும் இதன் காரணமாக அவ்வப்போது சில சர்ச்சைகளை சந்தித்த விராட் கோலி ஏதாவது ஒரு வகையான கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் பதவியை துறக்க வேண்டும் என்ற பேச்சுகள் நீண்டகாலமாகவே இருந்து வந்தன.

Kohli-2

- Advertisement -

இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விராட் கோலி ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் டி20 கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக இந்திய அணியின் அடுத்த கேப்டனாக யார் செயல்படுவார்கள் ? என்ற எதிர்பார்ப்பு அதிகளவில் எழுந்துள்ளது.

இந்நிலையில் எதிர்கால இந்திய அணியின் கேப்டனாக ஒரு புதிய வீரரை உருவாக்க வேண்டுமெனில் அதற்கு ஒரு நபர் தகுதியானவராக இருக்கிறார் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Rahul-1

இந்திய அணி ஒரு புதிய கேப்டனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டால் கே.எல் ராகுல் அதற்கு சரியாக இருப்பார். இதுவரை அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த தொடரில் கூட தனது அபாரமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டிலும் சரி, ஐபிஎல் தொடரிலும் சரி அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

Rahul

எனவே கே.எல் ராகுலை இந்திய அணியின் அடுத்த கேப்டனாக உருவாக்க முயற்சி செய்யலாம். ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். எனவே இந்திய அணியில் அவரை முதலில் துணை கேப்டனாக செயல்பட வைத்து பின்னர் படிப்படியாக கேப்டனாக உயர்த்தலாம் என கவாஸ்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement