IPL 2023 : பவுலர்கள் தாறுமாறா ஒய்ட் போடுவதை நிறுத்த அந்த ரூல்ஸை கொண்டு வாங்க – சுனில் கவாஸ்கர் புதிய யோசனை

Sunil-Gavaskar
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 தொடரில் அனைத்து அணிகளும் தலா ஒரு போட்டியில் விளையாடியுள்ளன. அந்த வகையில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் தன்னுடைய முதல் போட்டியில் குஜராத்திடம் தோற்றாலும் 2வது போட்டியில் லக்னோவை தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்து வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது. முன்னதாக ஒரு காலத்தில் துல்லியமான பந்து வீச்சுக்கு பெயர் போன அணியாக போற்றப்படும் சென்னையில் இந்த வருடம் முதலிரண்டு போட்டிகளிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியது அந்த அணி ரசிகர்களை கடுப்பாக வைத்தது.

Dhoni

- Advertisement -

குறிப்பாக இம்பேக்ட் வீரராக உள்ளே வந்த துஷார் டேஷ்பாண்டே முதல் போட்டியில் 3.2 ஓவரில் 51 ரன்களை வாரி வழங்கி வெற்றியைத் தாரை வார்த்த நிலையில் 2வது போட்டியிலும் ஆரம்பத்தில் சென்னையின் ரசிகர்கள் வயிற்றில் புளியை கரைக்கும் அளவுக்கு சுமாராக செயல்பட்டார். குறிப்பாக அடுத்தடுத்த ஒய்ட், நோ-பால்கள் உட்பட 11 பந்துகள் கொண்ட ஓவரை வீசிய அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக பந்துகளை கொண்ட பெரிய ஓவரை வீசிய சென்னை பவுலர் என்ற மோசமான சாதனை படைத்தார். சரி அவர் தான் அப்படி என்று பார்த்தால் அனுபவமிக்க தீபக் சஹாரும் 17வது ஓவரில் 3 அடுத்தடுத்த ஒய்ட் பந்துகளை வீசி கடுப்பேற்றினார்.

கவாஸ்கர் ஆலோசனை:
மொத்தத்தில் அந்த போட்டியில் லக்னோ பவுலர்கள் 7 ஒய்ட்களை வீசிய நிலையில் சென்னை பவுலர்கள் அதற்கு போட்டியாக 13 ஒய்ட் பந்துகளை வீசினர். இந்நிலையில் இப்படி பவுலர்கள் தாறுமாறாக ஒய்ட் பந்துகளை வீசுவதை தடுத்து நிறுத்த 2 அல்லது 3 தொடர்ச்சியான ஒய்ட் பந்துகளை வீசும் போது அதற்கு உடனடி தண்டனையாக பிரீ ஹிட் வழங்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது பற்றிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

Tushar DeshPandey

“ஒரு பவுலர் 2 முதல் 3 தொடர்ச்சியான ஒய்ட் பந்துகளை வீசும் போது அந்த சமயத்தில் பேட்ஸ்மேனுக்கு ஃப்ரீ ஹிட் கொடுக்க வேண்டும். ஏனெனில் இது போன்ற அதிகப்படியான ஒய்ட்கள் போட்டியை மிகவும் அதிகமாக தாமதப்படுத்துகின்றன. எனவே இந்த ஆலோசனையை அடுத்த ஐபிஎல் தொடருக்கு குறைந்தபட்சம் முன்பாக பரிந்துரைக்கு எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார். இருப்பினும் ஏற்கனவே பேட்ஸ்மேன்கள் முரட்டுத்தனமாக அடிப்பதால் டி20 கிரிக்கெட்டில் நிறைய விதிமுறைகள் பவுலர்களுக்கு எதிராக இருப்பதாக விமர்சனங்கள் இருக்கும் நிலையில் இது மிகவும் கடினமான ஆலோசனையாகவும் பரிந்துரையாகவும் இருப்பதாக சுனில் கவாஸ்கருக்கு அதே அறையில் வர்ணனை செய்த முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் இயன் பிஷப் பதிலளித்தார்.

- Advertisement -

குறிப்பாக ஒரு போட்டிக்கு 2 புதிய பந்துகள் என்பது ஏற்கனவே டி20 போட்டிகளில் பவுலர்கள் ஆதிக்கம் செலுத்துவதை பாதியாக குறைத்து விட்ட நிலையில் வித்தியாசமாக பந்து வீச முயற்சித்து துரதிஷ்டவசமாக ஒய்ட் பந்தாக மாறும் பட்சத்தில் அதற்கும் தண்டனையாக கொடுத்தால் பிரீ ஹிட் கொடுப்பது நிச்சயமாக மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கே அதிக சாதகமாக அமையும் என்று சொல்லலாம். முன்னதாக ரன்களை வாரி வழங்குவது கூட பரவாயில்லை ஆனால் நோ-பால் மற்றும் ஒய்ட் பந்துகளை வீசுவது மட்டும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று வல்லுனர்கள் தெரிவிப்பார்கள்.

Gavaskar

அந்த நிலையில் லக்னோவுக்கு எதிரான போட்டியில் சென்னை பவுலர்கள் தாறுமாறாக ஒய்ட் மற்றும் நோ-பால்களை வீசியதால் அதிருப்தியடைந்த கேப்டன் தோனி இனிமேலும் இவ்வாறு செயல்பட்டால் அடுத்த போட்டியில் வேறு கேப்டன் தலைமையில் விளையாட வேண்டி இருக்கும் என்று சிரித்த முகத்துடன் வெளிப்படையாகவே எச்சரிக்கை கொடுத்தார்.

இதையும் படிங்க:IPL 2023 : 2011 உ.கோ ஃபைனலில் சிக்ஸருடன் வெற்றியை பெற்று கொடுத்த தோனிக்கு – வான்கடே அறிவித்த மிகப்பெரிய கெளரவம்

இதைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 8ஆம் தேதியன்று மும்பைக்கு எதிராக வான்கடே மைதானத்தில் சென்னை தன்னுடைய 3வது போட்டியில் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.

Advertisement