அவங்க செஞ்சா தப்பில்ல.. இந்தியர்கள் செஞ்சா குத்தம்.. 3 வாரத்துல இங்கிலாந்து புலம்புவாங்க.. கவாஸ்கர் விமர்சனம்

Sunil Gavaskar
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நிறைவு பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 13 வருடங்கள் கழித்து 1 – 1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்து அசத்தியது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நிறைவு பெற்ற அந்த தொடரை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ள இந்தியா அடுத்ததாக தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

முன்னதாக தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டி இரண்டரை நாளிலேயே முடியும் அளவுக்கு பிட்ச் ஒருதலைபட்சமாக இருந்தது. குறிப்பாக முதல் நாளிலேயே 23 விக்கெட்டுகள் விழும் அளவுக்கு பேட்ஸ்மேன்கள் திண்டாடிய நிலையில் வேகப்பந்து வீச்சாளர்கள் ராஜாங்கம் நடத்தினார்கள். அதனால் இதே மைதானம் இந்தியாவில் இருந்திருந்தால் வேண்டுமென்றே வெல்வதற்காக அமைக்கப்பட்டதாக வெளிநாட்டவர்கள் விமர்சித்திருப்பார்கள் என இந்திய ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

இங்கிலாந்து புலம்புவாங்க:
இந்நிலையில் கேப் டவுன் மைதான பராமரிப்பாளர் தெரியாமல் செய்து விட்டார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவே இந்தியாவைச் சேர்ந்த மைதான பராமரிப்பாளர் இப்படி செய்திருந்தால் இந்திய அணி வெல்வதற்காக வேண்டுமேன்றே செய்ததாக வெளிநாடுகளைச் சேர்ந்த ஊடகங்கள் விமர்சித்திருப்பார்கள் என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார்.

அந்த வரிசையில் அடுத்ததாக இங்கிலாந்து தொடர் நடைபெறும் போது அந்நாட்டு ஊடகங்கள் இந்திய மைதானங்கள் பற்றி வசை பாடுவதை விரைவில் எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கும் கவாஸ்கர் இது மிட் டே’வில் பேசியது பின்வருமாறு. “அங்குள்ள பிட்ச் சரியாக இல்லையென்றால் மைதான பராமரிப்பாளர் தெரியாமல் செய்து விட்டதாக தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் சொல்வார்கள்”

- Advertisement -

“ஆனால் அதையே எங்களுடைய மைதான பராமரிப்பாளர்கள் செய்தால் கடந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய கேப்டன் விமர்சித்ததை போல் பேசுவார்கள். அதாவது எங்களுடைய மைதான பராமரிப்பாளர்கள் வேண்டுமென்றே செய்தார்கள் என்று பேசும் அவர்கள் தங்களுடைய மைதான பராமரிப்பாளர்கள் தெரியாமல் செய்து விட்டதாக கூறுவார்கள்”

இதையும் படிங்க: நீங்கல்லாம் மனுஷனா.. பதவிக்கு வந்ததும் திமிரை காட்டிய சாகிப்.. விளாசும் வங்கதேச ரசிகர்கள்

“இந்த சூழ்நிலையில அடுத்த 3 வாரங்களில் அதிகமாக சிணுங்கி புலம்பக்கூடிய அணிக்கு எதிராக இந்தியாவில் மிகப்பெரிய டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அவர்களுக்கு இங்குள்ள மைதானங்கள் பொருத்தமாக இருக்காது. அதனால் இந்திய மைதானங்களை பற்றிய விமர்சனங்கள் வேகமாகவும் தடிமனாகவும் வரும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் வரும் ஜனவரி 25ஆம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement