கிடைக்குற வாய்ப்பை சரியா பயன்படுத்தி பொறுப்பா ஆடுங்க – சுனில் கவாஸ்கர் காட்டம்

Gavaskar
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறது இந்திய அணி. இந்த இறுதிப் போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்ட முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், இந்திய அணியின் இளம் வீரர் ஒருவரின் பொறுப்பற்ற ஆட்டத்தைக் கண்டு வர்ணனையிலேயே அவரை சரமாரியாக விமர்ச்சித்து உள்ளார். முதல் இன்னிங்சில் தேவையே இல்லாத ஷாட் ஆடி அவுட்டாகிய அந்த வீரர், இரண்டாவது இன்னிங்சிலும் அதே போன்ற ஆட்டத்தையே வெளிப்படுத்தி அனைவரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளார்.

IND

- Advertisement -

மழையின் காரணமாக ரிசர்வ் டே என்று சொல்லப்பட்ட ஆறாவது நாள் வரை சென்ற இந்த போட்டியானது, ட்ராவில்தான் முடிவுபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் இந்திய அணி வீரர்களின் மோசமான பேட்டிங்கினால், வெற்றியை தன் வசப்படுத்தியது நியூசிலாந்து அணி. கடைசி நாளின் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே விராட் கோஹ்லி மற்றும் புஜாரா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இரண்டு விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்ததால், தோல்வியிலிருந்து தப்பிக்க இந்திய அணிக்கு ஒரு சிறந்த பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது.

ஆனால் அடுத்து களமிறங்கிய ரிஷப் பன்ட் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆட நினைத்தார். ஆனால் அது அவருக்கு கைகொடுக்கவில்லை. களமிறங்கிய உடனேயே அவருடைய கேட்சை தவறவிட்டார் டிம் சௌத்தி. அதற்குப் பிறகாவது சுதாரித்துக் கொண்டு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டிய நிலையிலும், ரிஷப் பன்ட்டின் ஆட்டத்தில் எந்த ஒரு மாற்றமும் தெரியவில்லை.

Pant

ட்ரெண்ட் போல்ட்டின் ஓவரில் இறங்கி வந்து சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு தனது விக்கெட்டை பறிகொடுத்தார் அவர். இதனைக் கண்ட சுனில் கவாஸ்கர் வர்ணனையில் கூறியதாவது,
ரிஷப் பன்ட் தன்னுடைய ஷாட் தேர்வில் எப்போதுமே சொதப்பி வருகிறார். கவலையில்லாமல் விளையாடுவதற்கும், கவனக்குறைவாக விளையாடுவதற்கும் இடையில் சிறு வித்தியாசம்தான் உள்ளது. இந்த போட்டியில் ரிஷப் பன்ட் அந்த இரண்டையுமே கடந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

pant 1

ஆரம்பத்திலேயே அவருக்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதைப் பயன்படுத்தி கொண்டு பொறுப்பாக ஆடாமல், அதை தவறவிட்டிருக்கிறார் என்று அந்த வர்ணனையில் அவர் கூறியிருக்கிறார். ரிஷப் பன்ட் தனது விக்கெட்டை இழந்து வெளியேறியதும், மேற்கொண்டு 14 ரன்கள் மட்டுமே குவித்த இந்திய அணியானது, 170 ரன்களுக்கே ஆல் அவுட்டாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement