வெ.இ கத்துக்குட்டிய அடிச்சு சாதனை படைக்க அவங்க ஏன் விளையாடனும்? இந்திய தேர்வுக்குழுவை விமர்சித்த கவாஸ்கர்

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் படுதோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அடுத்ததாக நடைபெறும் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக இந்தியா களமிறங்கும் இந்த முதல் லீக் சுற்று தொடரில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள அணியில் நிறைய மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் சமீபத்திய ஃபைனலில் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் கொஞ்சம் கூட போராடாமல் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை சந்தித்தது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது.

TEam India Rohit Sharma

- Advertisement -

குறிப்பாக பேட்டிங் வரிசையில் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் என்று ரசிகர்கள் கொண்டாடும் ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகியோர் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சொதப்பியது தோல்விக்கு முக்கிய காரணமானது. மேலும் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற கேப்டன் ரோகித் சர்மா அதை சரியாக பயன்படுத்தாமல் தரவரிசையில் நம்பர் ஒன் பவுல்களாக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்ந்தெடுக்காமல் சுமாரான கேப்டன்ஷிப் செய்தது தோல்வியை கொடுத்தது. அத்துடன் ஏற்கனவே 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்தித்ததால் அவர் பதவி விலக வேண்டுமென்று ரசிகர்கள் வெளிப்படையாக விமர்சித்தனர்.

சாடிய கவாஸ்கர்:
மேலும் டி20 கிரிக்கெட்டைப் போல 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்பாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்க வேண்டும் என்பதும் ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. ஆனால் பேட்டிங் துறையில் நிகழ்ந்த சொதப்பல்களின் மொத்த பழியையும் புஜாரா மீது போட்டு கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு தொலைநோக்கு பார்வையுடன் செயல்படாமல் மீண்டும் ரகானேவை துணை கேப்டனாக நியமித்துள்ளதாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஏற்கனவே விமர்சித்திருந்தார்.

wtc ind

அது போக பலவீனமான வெஸ்ட் இண்டீஸ் அணியை எளிதாக அடித்து 2 – 0 என்ற கணக்கில் வைட்வாஷ் வெற்றியும் ஒன்றுக்கும் உதவாத சாதனைகளையும் படைத்து வாருங்கள் என்றும் அவர் இந்திய அணியை கடந்த சில வாரங்களுக்கு முன்பே விமர்சித்தார். இந்நிலையில் ஜிம்பாப்வே நாட்டில் நடைபெறும் 2023 உலகக் கோப்பை குவாலிபயர் சுற்றில் நெதர்லாந்திடம் தோல்வியை சந்தித்து திண்டாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியை ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் எளிதாக அடித்து சாதனைகள் படைத்து தங்களுடைய புள்ளி விவரங்களை உயர்த்துவதற்கே இந்த டெஸ்ட் தொடர் உதவப்போவதாக மீண்டும் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

அப்படி பலவீனமான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக உறுதியாக வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இத்தொடரில் 2023 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு சீனியர்களுக்கு ஓய்வு கொடுத்து முழுக்க முழுக்க இளம் வீரர்கள் விளையாடுவதே சரியானதாக இருக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி மிட்-டே பத்திரிகையில் கூறியது பின்வருமாறு.

“கடந்த நூற்றாண்டில் இருந்த அளவுக்கு வெஸ்ட் இண்டீஸ் தற்போது பலமாக இல்லை. சொல்லப்போனால் 70களில் 2 சாம்பியன் பட்டம் வென்ற அவர்கள் இப்போது ஜிம்பாப்பேவில் நடைபெற்று வரும் 2023 உலகக்கோப்பை குவாலிபயர் சுற்றில் வெற்றி பெறுவதற்கே தடுமாறுகின்றனர். அப்படிப்பட்ட நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் இளம் வீரர்களை தேர்வு செய்வதே சரியானதாக இருக்கும். ஆனால் அடுத்தடுத்த 2 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோல்வியை சந்தித்த அதே சீனியர் அணியை மீண்டும் தேர்வு செய்துள்ள இந்தியா என்ன பாடத்தை கற்றுள்ளது என தெரியவில்லை”

இதையும் படிங்க:ஐசிசி உலககோப்பை 2023 : நம்ம சிங்கார சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டிகளின் அட்டவணை, முழு விவரம் இதோ

“குறிப்பாக கரீபியனில் இருக்கும் பேட்டிங்க்கு சாதகமான பிட்ச்களில் இந்த சீனியர் நட்சத்திர வீரர்கள் பெரிய ரன்கள் அடித்து தங்களுடைய சொந்த புள்ளி விவரங்களை உயர்த்துவதில் என்ன பயன் ஏற்படப் போகிறது. ஏற்கனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோற்ற நாம் அடுத்ததாக ஒருநாள் உலக கோப்பையை வெல்ல முயற்சிக்க வேண்டும். அந்த சூழ்நிலையில் சீனியர் வீரர்கள் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடாமல் ஓய்வெடுத்து ஒருநாள் மற்றும் டி20 போன்ற வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுவதை நான் விரும்புகிறேன். ஏனெனில் கடந்த அக்டோபர் முதல் அவர்கள் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்” என்று கூறினார்.

Advertisement