- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சூர்யகுமாரை பேசுவதற்கு முன் உங்களோட 10 சீட்டிங் பத்தியும் பேசுங்க.. ஆஸி ஊடங்களுக்கு கவாஸ்கர் பதிலடி

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் இந்தியா வென்று சாதனை படைத்தது. ஆனால் அந்த தொடரின் இறுதிப் போட்டியில் சூரியகுமார் யாதவ் பிடித்த அற்புதமான கேட்ச் பாகிஸ்தான், இலங்கை போன்ற எதிரணி ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது. ஏனெனில் அப்போட்டியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட போது பாண்டியா வீசிய முதல் பந்திலேயே டேவிட் மில்லர் நேராக சிக்சர் அடித்தார்.

அதை லாங் ஆஃப் திசையில் இருந்து ஓடி வந்த சூரியகுமார் யாதவ் கச்சிதமாக பிடித்தும் பேலன்ஸை இழந்ததால் பந்தை களத்திற்குள் தூக்கிப் போட்டு விட்டு பவுண்டரிக்குள் சென்றார். அடுத்த சில நொடிகளில் மீண்டும் உள்ளே வந்த அவர் கேட்சை பிடித்து இந்தியாவுக்கு வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்தார். ஆனால் அந்த நேரத்தில் அவருடைய கால் பவுண்டரி எல்லையில் உரசியதாகவும் அதற்கு முன்பாக பவுண்டரி வேண்டுமென்றே சில அடிகள் பின்னோக்கி நகர்த்தப்பட்டிருந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

- Advertisement -

கவாஸ்கர் பதிலடி:
குறிப்பாக பாகிஸ்தான், இலங்கை ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டு ஆஸ்திரேலியாவின் சில பிரபலமான ஊடகங்களும் சூரியகுமார் பிடித்த கேட்ச்சில் சந்தேகமிருப்பதாக எழுதின. இந்நிலையில் சூரியகுமார் யாதவை பேசுவதற்கு முன் பந்தை சேதப்படுத்தியது உட்பட காலம் காலமாக ஆஸ்திரேலிய அணி செய்த 10 ஏமாற்று வேலைகளைப் பற்றிய ஆஸ்திரேலிய ஊடகங்கள் எழுத வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் இனிமேல் தான் இந்தியா நிறைய கோப்பைகளை வெல்லும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஃபைனலில் கேட்ச் பிடித்து டேவிட் மில்லரை சூரியகுமார் அவுட்டாக்கியதன் உண்மைத்தன்மை பற்றி ஆஸ்திரேலிய செய்தித்தாளில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் அங்கே சூரியகுமார் அற்புதமாக செயல்பட்டு கேட்ச் பிடித்தார் என்பது எல்லா ரிப்ளைக்களிலும் தெளிவாக தெரிகிறது”

- Advertisement -

“யாருமே அதைப் பற்றி கேள்வி எழுப்பவில்லை. அந்த செய்தியை எழுதிய ஆஸ்திரேலிய எழுத்தாளர் கேள்வி எழுப்பியுள்ளார். சூரியகுமாரை நோக்கி விரலை காட்ட முயற்சிக்கும் முன் ஆஸ்திரேலியர்கள் அப்பட்டமாக செய்த 10 ஏமாற்று வேலைகள் பற்றியும் வீடியோவை அவர் பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கலாம். 2024 டி20 உலகக் கோப்பையை வென்றது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் தாகத்தை மட்டும் தணிக்கவில்லை”

இதையும் படிங்க: பும்ராவின் வித்யாசம் 48 செ.மீ.. 2019லயே ராபர்ட்ஸ், கர்ட்லி ஆம்ப்ரோஸிடம் பாரட்டை வாங்குனாரு.. சாஸ்திரி பேட்டி

“தொடர் முழுவதும் தோற்காமல் இருந்த இந்திய அணி ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது. கடந்த உலகக் கோப்பையில் ஃபைனலில் தோல்வியை சந்தித்த இந்திய அணி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கண்டிப்பாக இன்னும் நிறைய பட்டங்கள் வெல்லும். ஏனெனில் இந்தியாவிடம் பெஞ்சில் உள்ள வீரர்கள் கூட வலுவாக உள்ளனர். அதற்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -