வேணும்னா பாருங்க.. இந்தியாவுக்காக வராத விராட் கோலி அதுலயும் விளையாட மாட்டாரு.. கவாஸ்கர் கருத்து

Sunil Gavaskar 6
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4 போட்டிகளின் முடிவிலேயே 3 – 1* என்ற கணக்கில் வென்றுள்ளது. குறிப்பாக விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமலேயே ஜெய்ஸ்வால், துருவ் ஜுரேல் போன்ற இளம் வீரர்களை வைத்து இங்கிலாந்தை தோற்கடித்துள்ள இந்தியா தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை காண்பித்துள்ளது.

முன்னதாக இந்த தொடரில் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி முதலிரண்டு போட்டிகளில் மட்டும் சொந்தக் காரணங்களுக்காக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதால் முதலிரண்டு போட்டிகளில் விளையாடாத விராட் கோலி கடைசி 3 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாட வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

- Advertisement -

கவாஸ்கர் கருத்து:
ஆனால் மீண்டும் சொந்த காரணங்களுக்காக கடைசி 3 போட்டிகளிலும் விராட் கோலி விளையாட மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்தது. அதன் வாயிலாக தன்னுடைய 12 வருட கேரியரில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் விராட் கோலி முழுமையாக விலகியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அந்த நிலையில் தமக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாக விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதியினர் இன்ஸ்டாகிராமில் அறிவித்தனர்.

மேலும் அவருக்கு அக்காய் என்று பெயர் வைத்துள்ளதாகவும் அவர்கள் அறிவித்தனர். அதனால் ஏராளமான முன்னாள் இந்நாள் வீரர்களும் ரசிகர்களும் விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் குழந்தை பிறந்து விட்டதால் விராட் கோலி குறைந்தபட்சம் இத்தொடரின் கடைசி போட்டியிலாவது விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு சில ரசிகர்களிடம் இருக்கிறது.

- Advertisement -

ஆனால் ஏற்கனவே அறிவித்தது போல் கடைசி 3 போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்று உறுதியாக முடிவெடுத்துள்ள விராட் கோலி தற்போது லண்டனில் தன்னுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. இந்நிலையில் குழந்தை பிறப்புக்காக நாட்டுக்காக இங்கிலாந்து தொடரில் விளையாடாமல் இந்திய அணியை புறக்கணித்த விராட் கோலி ஐபிஎல் 2024 தொடரிலும் விளையாட மாட்டார் என்று எதிர்பார்ப்பதாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஜுரேல் இல்ல.. சந்தேகமே வேண்டாம் அவர் தான் அடுத்த எம்எஸ் தோனி.. ரெய்னா வித்யாசமான கருத்து

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? அவர் சில காரணங்களுக்காக இங்கிலாந்து தொடரில் விளையாடவில்லை. அதே போல ஒருவேளை ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாட மாட்டார்” என்று கூறினார். இருப்பினும் இப்போதெல்லாம் நாட்டுக்காக விளையாடாமல் போனாலும் எந்த வீரரும் ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியை கூட தவற விடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement