ஜுரேல் இல்ல.. சந்தேகமே வேண்டாம் அவர் தான் அடுத்த எம்எஸ் தோனி.. ரெய்னா வித்யாசமான கருத்து

Suresh Raina 2
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 4 போட்டிகளின் முடிவிலேயே 3 – 1* என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற இந்த தொடரில் விராட் கோலி, கேஎல் ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் பல்வேறு காரணங்களுக்காக விளையாடாமல் போனது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று நம்பப்பட்டது.

இருப்பினும் ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகிய இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியில் பங்காற்றினர். குறிப்பாக ஜெயஸ்வால் இதுவரை 655 ரன்கள் அடித்து விராட் கோலி இடத்தில் இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்து வருகிறார். அதே போல சர்ப்ராஸ் கான், துருவ் ஜுரேல் ஆகிய இளம் வீரர்கள் இந்த தொடரில் அறிமுகமாகி தங்களுடைய தேர்வை நியாயப்படுத்தும் வகையில் நல்ல ரன்களை குவித்து வெற்றிகளில் பங்காற்றினர்.

- Advertisement -

அடுத்த தோனி:
குறிப்பாக 4வது போட்டியில் மிகவும் அழுத்தமான நேரத்தில் 90, 39* ரன்கள் அடித்த துருவ் ஜுரேல் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் விக்கெட் கீப்பராக விளையாடும் அவர் அந்த போட்டியில் விழிப்புணர்வுடன் விளையாடிய விதத்தை வைத்து அடுத்த தோனியாக உருவாக்கும் வழியில் இருப்பதாக ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டினார்.

இந்நிலையில் இத்தொடரில் இளம் வீரர்களை சரியாக வழி நடத்தி சிறப்பாக கேப்டன்ஷிப் செய்த ரோகித் சர்மா அடுத்த எம்எஸ் தோனியை போல் செயல்படுவதாக சுரேஷ் ரெய்னா வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர் அடுத்த எம்எஸ் தோனி. அவர் தனது வேலையை சிறப்பாக செய்துள்ளார். குறிப்பாக எம்எஸ் தோனியை போலவே இத்தொடரில் அவர் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்”

- Advertisement -

“சௌரவ் கங்குலி தன்னுடைய அணி வீரர்களுக்கு நிறைய ஆதரவு கொடுத்தார். பின்னர் எம்எஸ் தோனி கேப்டனாக வந்து அணியை முன்னின்று வழி நடத்தினார். அதே வழியில் சரியான பாதையில் பயணிக்கும் ரோகித் அபாரமான கேப்டன். எனவே இந்த வெற்றிக்கான பாராட்டை நான் ரோகித் சர்மாவுக்கு கொடுக்க விரும்புகிறேன். முதலில் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு கொடுத்த அவர் பின்னர் துருவ் ஜுரேலை இந்த அணியில் ஒரு அங்கமாக உருவாக்கியுள்ளார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: தோனி மற்றும் டிராவிட் ஆகியோர் சாதனையை கேப்டனாக சமன் செய்த ரோஹித் சர்மா – விவரம் இதோ

அவர் கூறுவது போல இந்த தொடரில் இளம் வீரர்களை சிறப்பாக வழி நடத்திய ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியை ஒரு தொடரில் வீழ்த்திய முதல் கேப்டன் என்ற பெருமையை பெற்றார். இருப்பினும் விராட் கோலி அளவுக்கு அவருடைய கேப்டன்ஷிப் இத்தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று சில முன்னாள் வீரர்கள் கலவையான விமர்சனத்தை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement