
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் தமிழகத்தை சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி தற்போது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்து அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். ஏற்கனவே நடைபெற்று முடிந்த மூன்று போட்டியிலும் விக்கெட்டை வீழ்த்தி அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார்.
இவ்வேளையில் பிப்ரவரி 18-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியிலும் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் மூன்று ஓவர்கள் பந்துவீசி வெறும் 14 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். இதனால் எதிர்வரும் சூப்பர் 8 சுற்றுக்கான போட்டியிலும் அதன்பின்னர் இறுதி கட்ட ஆட்டங்களிலும் அவர் இன்னும் சிறப்பாக பந்து வீசுவார் என்று பல்வேறு பிரபலங்களும் அவரை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் வருண் சக்கரவர்த்தியின் இந்த சிறப்பான செயல்பாடு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : வருண் சக்கரவர்த்தி நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அற்புதமாக செயல்பட்டிருந்தார். குறிப்பாக 3 ஓவர்களில் 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இப்படி ஒரு பந்துவீச்சாளர் பந்துவீசும் போது விக்கெட் கிடைப்பதோடு சேர்த்து ரன்களும் குறைகிறது. எதிரணியினர் வருண் சக்கரவர்த்தியை எதிர்கொள்ள மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே இந்த உலக கோப்பை தொடரின் கீ பவுலராக வருண் சக்கரவர்த்தியே இருப்பார் என்று நினைக்கிறேன். அவருடைய நான்கு ஓவர்கள் ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்கும் விடயமாகவும் மாறியுள்ளது.
இதையும் படிங்க : இனிமே பவுலர்ஸ் ஷிவம் துபேவுக்கு எதிராக பந்துவீச கஷ்டப்படுவாங்க.. காரணத்துடன் பாராட்டிய – சுனில் கவாஸ்கர்
லீக் சுற்று ஆட்டங்களில் சிறப்பாக பந்து வீசியுள்ள அவர் சூப்பர் 8 சுற்று போட்டிகளில் எவ்வாறு செயல்பட போகிறார்? என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அதோடு அவரை எதிரணியினர் அவ்வாறு கவுண்டர் செய்யப்போகிறார்கள்? என்பதையும் காண ஆவலுடன் காத்திருப்பதாக சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.