ஷ்ரேயாஸ் ஐயருக்கு கே.கே.ஆர் கொஞ்சம் கூட அந்த மரியாதையை கொடுக்கல – சுனில் கவாஸ்கர் விளாசல்

Gavaskar and Shreyas
- Advertisement -

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம் மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று கே.கே.ஆர் அணி சாதனையையும் நிகழ்த்தி இருந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற அந்த ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகளில் இருந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா அணியானது எந்த இடத்திலும் சரிவை சந்திக்காமல் இறுதிப்போட்டி வரை முன்னேறி இறுதி போட்டியிலும் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.

ஷ்ரேயாஸ் ஐயருக்கு சரியான மரியாதை கிடைக்கல : சுனில் கவாஸ்கர்

இப்படி கொல்கத்தா அணி ஒரு தொடரின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை ஆதிக்கத்தை செலுத்தி கோப்பையை கைப்பற்றியது அதுவே முதல் முறையாக இருந்தது. அந்த அளவிற்கு கொல்கத்தா அணி மிகச் சிறப்பாக செயல்பட ஷ்ரேயாஸ் ஐயரின் மிகச் சிறப்பான கேப்டன்சியும் ஒரு காரணமாக இருந்தது. ஆனால் கொல்கத்தா அணி வெற்றி பெற்ற போதெல்லாம் ஷ்ரேயாஸ் ஐயரை யாரும் பெரியளவில் பாராட்டவில்லை. அவருக்கு பதிலாக கம்பீர் செய்த மாற்றங்களால் தான் அந்த அணி வெற்றி பெற்றது என பலரும் பாராட்டி இருந்தார்கள்.

- Advertisement -

இப்படி தொடர்ச்சியாக கம்பீரை மட்டுமே பாராட்டிய அனைவரும் ஷ்ரேயாஸ் ஐயரை மறந்து விட்டனர். அதுமட்டும் இன்றி கடந்தாண்டு நடைபெற்ற மெகா ஏலத்தின் போது கூட கே.கே.ஆர் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை தக்க வைக்காமல் கழட்டிவிட்டு மற்ற வீரர்களுக்கு முக்கியத்துவம் அளித்திருந்தது. அதேவேளையில் கொல்கத்தா அணியிலிருந்து வெளியேறிய ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

ஆனால் கொல்கத்தா அணி இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இரண்டு தோல்விகளை பெற்று பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில் கொல்கத்தா அணி இப்படி தடுமாற காரணமே ஷ்ரேயாஸ் ஐயரை வெளியேற்றியது தான் என்றும் அந்த அணியில் அவருக்கு கேப்டன் என்கிற மரியாதை சரியாக வழங்கப்படவில்லை என்றும் முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

கடந்த ஆண்டு கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற ஷ்ரேயாஸ் ஐயர் மிகப்பெரிய அளவில் உதவியிருந்தார். ஆனால் கேப்டன் என்ற மரியாதையை அவருக்கு சரியாக அந்த அணியின் நிர்வாகம் கொடுக்கவில்லை என்று நினைக்கிறேன். என்னை பொறுத்தவரை அவரின் கேப்டன்சி மிக சிறப்பாக உள்ளது. இந்த ஆண்டு கொல்கத்தா அணி அவரை இழந்ததாலேயே தடுமாறி வருகிறது. அதேவேளையில் பஞ்சாப் அணிக்கு சென்ற அவர் அந்த அணியை மிகச் சிறப்பாக வழி நடத்தி வருகிறார் என்று சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தம்பி இதெல்லாம் உனக்கு தேவையா? இப்படியெல்லாம் செய்யக்கூடாது.. எச்சரிக்கையுடன் தண்டிக்கப்பட்ட லக்னோ வீரர்

சுனில் கவாஸ்கர் கூறியது போன்றே இந்த ஆண்டு அஜின்க்யா ரஹானே தலைமையில் விளையாடி வரும் கொல்கத்தா அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் வேளையில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதல் 2 போட்டிகளிலும் அட்டகாசமான வெற்றியை பெற்று ஆதிக்கத்தை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement