ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்வதற்காக இறுதிக்கட்ட போட்டி துவங்கியுள்ளது. அதில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் தொடர் தோல்விகளால் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. மறுபுறம் மும்பை, குஜராத், பெங்களூரு, பஞ்சாப், டெல்லி, லக்னோ, ஹைதெராபாத், கொல்கத்தா உள்ளிட்ட பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய போராடி வருகின்றன.
அதில் தங்களுடைய இலட்சிய கனவு முதல் கோப்பையை முத்தமிடும் முனைப்புடன் விளையாடும் பெங்களூரு இதுவரை 10 போட்டிகளில் 7 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் அந்த அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது. மேலும் சென்னை, மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி ஆகிய அணிகளை அதன் சொந்த மண்ணில் பெங்களூரு தோற்கடித்தது.
மிரட்டும் பெங்களூரு:
அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு தொடரில் முதல் 6 வெளியூர் போட்டிகளில் வென்ற முதல் அணி என்ற சரித்திர சாதனையை பெங்களூரு படைத்தது. அதனால் அந்த அணி கோப்பையை வெல்லும் என்று ஆர்சிபி ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். மறுபுறம் ஆரம்பத்தில் 9வது இடத்தில் திணறிய மும்பை அதன் பின் தொடர்ந்து 6 வெற்றிகளைப் பெற்று தற்போது புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஜொலிக்கிறது.
பாண்டியா தலைமையில் ஜஸ்ப்ரித் பும்ரா, ரோஹித் சர்மா, சூரியகுமார் என அனைத்து வீரர்களும் அசத்துவதால் மும்பை மீண்டும் கட்டுக்கடங்காத அணியாக உருவெடுத்துள்ளது. அந்த வகையில் மாஸ் கம்பேக் கொடுத்துள்ள மும்பை 6வது கோப்பையை வெல்லும் என்று பல்தான்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். இந்நிலையில் பாதியில் கம்பேக் கொடுத்துள்ள மும்பை அணியின் எழுச்சி எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கவாஸ்கர் கணிப்பு:
எனவே ஆரம்பம் முதலே தொடர்ச்சியாக சீராக அசத்தி வரும் பெங்களூரு 2025 ஐபிஎல் கோப்பையை வெல்லும் என்று அவர் கணித்துள்ளார். இது பற்றி கவாஸ்கர் பேசியது பின்வருமாறு. “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சிறப்பாக பேட்டிங் செய்து சூப்பராக ஃபீல்டிங் செய்கின்றனர். அவர்களை அடுத்து மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு நெருக்கமாக உள்ளனர். ஆனால் அவர்கள் இப்போது தான் எழுச்சியைக் கண்டுள்ளனர்”
இதையும் படிங்க: தமிழக வீரர் சுதர்சன் இதை செய்றது பாத்து திகைத்து போய்ட்டேன்.. ஜோஸ் பட்லர் ஸ்பெஷல் பாராட்டு
“அந்த எழுச்சியை அவர்களால் தொடர முடியுமா? என்பது கேள்வியாகும். ஏனெனில் அடுத்து வரும் 3 போட்டிகளில் அவர்கள் கடினமான டாப் எதிரணிகளை எதிர்கொள்ள உள்ளனர். இங்கிருந்து அவர்கள் எவ்வாறு வேகத்தை எடுத்துச் செல்லப் போகிறார்கள்? என்பது முக்கியம். ஆனால் ஆம் கண்டிப்பாக ஆர்சிபி கோப்பையை வெல்லக்கூடிய அணியாக விளையாடி வருகிறது” என்று கூறினார்.



