தமிழக வீரர் சுதர்சன் இதை செய்றது பாத்து திகைத்து போய்ட்டேன்.. ஜோஸ் பட்லர் ஸ்பெஷல் பாராட்டு

- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே இரண்டாம் தேதி அகமதாபாத் நகரில் 50வது போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் ஹைதராபாத் அணியை குஜராத் 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த வெற்றிக்கு பேட்டிங் துறையில் கேப்டன் கில் 76, சாய் சுதர்சன் 48, ஜோஸ் பட்லர் 64 ரன்கள் அடித்து 225 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்ய முக்கிய பங்காற்றினர்.

அடுத்து விளையாடிய ஹைதராபாத்தை 186/6 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வென்ற குஜராத்துக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதையும் சேர்த்து 7 வெற்றிகளை பெற்ற குஜராத் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை நெருங்கியுள்ளது. இந்தப் போட்டியையும் சேர்த்து மொத்தம் 504 ரன்கள் குவித்துள்ள தமிழகத்தின் சாய் சுதர்சன் மும்பையின் சூரியகுமாரை முந்தி ஆரஞ்சு தொப்பியை தன்வசமாக்கியுள்ளார்.

- Advertisement -

திறமையான சுதர்சன்:

இந்நிலையில் தொடர்ச்சியாக ரன்கள் குவிக்கும் சாய் சுதர்சன் திறமையை வலைப்பயிற்சியில் பார்த்த போது திகைத்துப் போனதாக ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ஏனெனில் அந்தளவுக்கு சுதர்சன் திறமை வாய்ந்தவர் என்று பாராட்டும் பட்லர் ஹைதராபாத்துக்கு எதிராக பெற்ற வெற்றியைப் பற்றி பேசியது பின்வருமாறு. “ஆம் இது எங்களுடைய முழுமையான செயல்பாடுகளால் கிடைத்த வெற்றியாகும். களத்தில் எங்களுடைய சிறந்த செயல்பாடுகளை கொடுத்தோம்”

“இந்த வருடம் நாங்கள் சில கேட்சுகளை தவற விட்டோம். ஆனால் இப்போட்டியில் ரசித் கான் பிடித்த கேட்ச் அற்புதமானது. அது வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்தது. எங்களுடைய பேட்ஸ்மேன்கள் நல்ல தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் விளையாடும் வழியில் வெற்றிக்கான அடித்தளத்தை அற்புதமாக அமைத்து வருகின்றனர். கில் – சுதர்சன் ஆகியோர் சிறந்த டெக்னிக் கொண்ட கலாச்சாரமிக்க வீரர்கள்”

- Advertisement -

பட்லர் பாராட்டு:

“அவர்கள் வெள்ளைக்கோட்டை பிடித்துக் கொண்டு ரன்கள் அடித்தனர். சொல்லப்போனால் இன்று அவர்கள் சில கிளாசிக்கள் ஷாட்டுகளை அடித்து வேகமாக ரன்கள் குவித்தது ஆச்சரியமாக இருந்தது. சாய் சுதர்சன் பற்றி ஏற்கனவே நான் சில முறை தெரிவித்துள்ளேன். அவரை முதல் நாள் வலைப்பயிற்சியில் பார்த்த போது அவர் எந்தளவுக்கு சிறந்தவர் என்று திகைத்துப் போனேன்”

இதையும் படிங்க: ஆதாரமற்ற குற்றச்சாட்டு.. சஞ்சு சாம்சனுக்கு சப்போர்ட் பண்ண போயி 3 ஆண்டுகள் தடை பெற்ற ஸ்ரீசாந்த் – என்ன நடந்தது?

“அவரது தோள்களில் பெரிய அமைதியான தலை இருக்கிறது. அவர் எடுக்கும் முயற்சி, உழைப்பு, ஆட்டத்தைப் பற்றிய புரிதல், தினமும் வேலை செய்ய வேண்டும் என்ற பணிவு ஆகியவை சிறப்பானது. தொடர்ச்சியாக அற்புதமாக விளையாடி வரும் அவர் தகுதியான வெகுமதிகளைப் பெறுகிறார்” என்று கூறினார். மேலும் பிரசித் கிருஷ்ணா, ரசித் கான் ஆகியோர் இந்த வெற்றியில் பங்காற்றியதாகவும் பட்லர் பாராட்டினார். அத்துடன் மும்பைக்கு எதிரான அடுத்தப் போட்டியில் விளையாடக் காத்திருப்பதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement