ஐ.பி.எல் தொடரை பொறுத்தவரை இந்த டீம் தான் சுத்தமா லக் இல்லாத டீம் – சுனில் கவாஸ்கர் ஓபன்டாக்

Gavaskar
- Advertisement -

கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது தற்போது 15-வது சீசனை எட்டியுள்ளது. இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் முழுவதும் இந்தியாவிலேயே நடத்தப்படும் என்றும் மார்ச் 26-ஆம் தேதி இந்த தொடர் துவங்குவதும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது இந்த தொடர் துவங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த இரண்டு மாதங்களுக்கு ரசிகர்களை மகிழ்விக்க போகும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது.

IPL

- Advertisement -

இந்நிலையில் இந்த ஐபிஎல் வரலாற்றில் ஒரு அதிர்ஷ்டம் இல்லாத அணி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுவரை ஐபிஎல் தொடரில் பல அணிகள் விளையாடி இருந்தாலும் பஞ்சாப் அணி பல முன்னணி வீரர்களை வைத்திருந்தும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் தவித்து வருகிறது.

குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக ராகுல் தலைமையில் செயல்பட்டு வந்த அந்த அணி சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தனிப்பட்ட முறையில் ராகுலின் பேட்டிங் சிறப்பாக இருந்தாலும் சரி அவர்களால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை அதன் காரணமாக இந்த ஆண்டு மாயங்க் அகர்வால் கேப்டனாக செயல்படுகிறார்.

pbks

இதுவரை நடைபெற்றுள்ள 15 சீசனில் 2008 மற்றும் 2014 ஆகிய இரண்டு முறை மட்டுமே பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்கு சென்றுள்ளது. மற்றபடி அவர்கள் இதுவரை பிளே ஆப் சுற்றுக்கு சென்றது கிடையாது. இந்நிலையில் பஞ்சாப் அணியின் இந்த விவகாரம் குறித்து பேசிய சுனில் கவாஸ்கர் கூறுகையில் : இந்த ஆண்டும் பஞ்சாப் அணி எளிதாக இருக்காது. இந்த ஒரு அணி தான் எனக்கு தெரிந்து அதிர்ஷ்டமற்ற அணி என்று நினைக்கிறேன்.

- Advertisement -

ஏனெனில் நல்ல திறமையான வீரர்கள் இருந்தும் அவர்களின் திறமை வெளிப்படாமல் போகின்றது. டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அதிர்ஷ்டம் என்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் இதுவரை பஞ்சாப் அணிக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றே கூறலாம். 2014 ஆம் ஆண்டு மட்டும் ஒரு முறை மட்டுமே அவர்கள் இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளார்கள் என்று நினைக்கிறேன். மற்றபடி அவர்களுக்கு அதிர்ஷ்டமே கிடையாது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இந்தியாவாலே முடில ஆனா அசத்தி காட்டிய பங்களாதேஷ் அணி – தெ.ஆ அணிக்கு ஏற்பட்ட சோகம்

இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் மாயங்க் அகர்வால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள வேளையில் அந்த அணியில் ரபாடா, பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டன், ஷாருக்கான், ஷிகர் தவான் போன்ற முக்கிய வீரர்களை அவர்கள் ஏலத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement