சச்சினுக்கு தோனிக்கும் கிடைத்த கவுரவம் சீக்கிரமா இவங்க 2 பேருக்கும் கிடைக்கும் – சுனில் கவாஸ்கர் கருத்து

Gavaskar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் மற்றும் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி ஆகியோரது பங்களிப்பினை கௌரவிக்கும் விதமாக பிசிசிஐ அவர்களது ஜெர்சி எண்ணிற்கு ஓய்வினை வழங்கி வேறு எந்த இந்திய வீரரும் இனி சர்வதேச கிரிக்கெட்டில் 10-ஆம் நம்பரையோ, 7-ஆம் நம்பரையோ தேர்வு செய்ய முடியாது என்று அறிவித்திருந்தது.

சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள், அதிகப்படியான ரன்கள், அதிக சர்வதேச அரை சதங்கள் என பல்வேறு உலக சாதனையை தன் வசம் வைத்திருக்கும் சச்சின் டெண்டுல்கருக்கும், ஐசிசி நடத்திய மூன்று வகையான கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டனான மகேந்திர சிங் தோனிக்கும் பிசிசிஐ இந்த சிறப்பு கவுரவத்தினை வழங்கியிருந்தது.

- Advertisement -

அந்த வகையில் கடந்த 2017-ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கரின் 10-ஆம் நம்பர் ஜெர்சிக்கு ஓய்வினை அறிவித்த பிசிசிஐ-யானது கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தோனியின் 7-ஆம் நம்பர் ஜெர்சிக்கும் ஓய்வளிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக பெரும் பங்களிப்பை வழங்கியிருந்த இந்த இரண்டு வீரர்களுக்கு அடுத்து தற்போது அடுத்தபடியாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரது ஜெர்சி எண்களுக்கும் ஓய்வு வழங்கி பிசிசிஐ அவர்களை கௌரவப்படுத்தும் என்று சுனில் கவஸ்கர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது போட்டியின் போது வர்ணனையாளராக செயல்பட்ட சுனில் கவாஸ்கர் போட்டியின் இடையே புகழ் பெற்ற வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரையும் பாராட்டினார். மேலும் இந்திய கிரிக்கெட்டிற்காக அவர்கள் ஆற்றிய பங்களிப்பை நினைத்து நிச்சயம் பிசிசிஐ அவர்களது ஜெர்சி எண்ணுக்கு ஓய்வு வழங்கும் அப்படி செய்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இந்திய கிரிக்கெட்டில் அவர மாதிரி சுயநலமற்ற பிளேயர ரொம்ப நாளா பாக்கல.. சைமன் டௌல் பாராட்டு

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய கிரிக்கெட்டில் நம்பர் 7 மற்றும் நம்பர் 10 ஆகிய இரண்டு ஜெர்சி எண்களைப் போலவே விரைவில் 45 மற்றும் 18 ஆகிய ஜெர்சி எண்கள் எதிர்காலத்தில் ஓய்வு பெறப்போவதை என்னால் பார்க்க முடிகிறது என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement