உலகத்துல எங்கையாவது இப்படி ஒரு கூத்து நடக்குமா? இந்தியாவின் கோச்சிங் பற்றி பிசிசிஐக்கு கவாஸ்கர் சரியான கேள்வி

Sunil-gavaskar
- Advertisement -

வரலாற்று சிறப்புமிக்க ஐசிசி டி20 உலக கோப்பை வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரில் 15 வருடங்கள் கழித்து 2வது கோப்பையை வென்று நாட்டுக்கு பெருமை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. அதிலும் சூப்பர் 12 சுற்றில் தேவையான வெற்றிகளுடன் அரரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா வழக்கம் போல அழுத்தமான நாக் அவுட் போட்டியில் சொதப்பி 10 விக்கெட் வித்தியாசத்தில் கொஞ்சம் கூட போராடாமல் படுதோல்வியை சந்தித்தது இந்திய ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களை கடுப்பாக வைத்தது.

IND-Team

- Advertisement -

அத்துடன் இந்த தொடரில் விராட் கோலி, சூரியகுமார் யாதவ் உட்பட ஒரு சிலரை தவிர்த்து கேப்டன் ரோகித் சர்மா உட்பட பெரும்பாலான வீரர்கள் சொதப்பலாக செயல்பட்டதால் அடுத்த உலக கோப்பைக்கு முன்பாக புதிய வீரர்களுக்கு வாய்ப்பளித்து இளம் அணியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இத்தனைக்கும் எதிரணிகளை காட்டிலும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் அணியாக இருந்தும் அதிகப்படியான அழுத்தம் கொண்ட ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவத்தை பெற்றும் ஒரு நாக் அவுட் போட்டியை சமாளித்து கோப்பை வெல்ல முடியாத இந்திய அணியினர் தற்போது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்கள்.

உலகமாக கூத்து:

போதாக்குறைக்கு பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங், மனநலம் பாதுகாப்பு உட்பட ஏராளமான பயிற்சியாளர்கள் உதவிக்காக இருந்தும் எந்த முன்னேற்றத்தையும் காண முடியாமல் இந்திய அணி தோல்வியடைந்தது. அதனால் அதிருப்தியடைந்துள்ள முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் உலகிலேயே மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படும் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக இருந்தும் எதற்காக எக்ஸ்ட்ராவாக ஒரு பேட்டிங் பயிற்சியாளர் என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஏனெனில் இந்த உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக கடந்த மாதம் ஆஸ்திரேலியா புறப்பட்ட இந்திய அணியில் கடைசி நேரத்தில் விலகிய பும்ராவை தவிர்த்து 14 வீரர்கள் இடம் பிடித்திருந்தனர்.

dravid

ஆனால் அவர்களை மிஞ்சும் வகையில் பயிற்சியாளர் குழுவில் மட்டும் 15 பேர் இடம் பிடித்திருந்தது ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் ஆச்சரியப்பட வைத்தது. இருப்பினும் 1983இல் உலகக் கோப்பை வென்ற போதும், 1985 உலக சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற போதும் தங்களுக்கு பயிற்சியாளர்களே இல்லை என்று தெரிவிக்கும் சுனில் கவாஸ்கர் 2011 உலக கோப்பையை வென்ற போது கூட இந்திய அணியுடன் இவ்வளவு பயிற்சியாளர்கள் இல்லை என்று சாடியுள்ளார். இதெல்லாம் அதிகமாக பணம் இருக்கும் பிசிசிஐயின் தேவையற்ற செயல் என்று விமர்சிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“1983 உலக கோப்பையில் எங்களிடம் ஒரே ஒரு மேனேஜர் மட்டுமே இருந்தார். 1985 தொடரிலும் அதே நிலைமை தான். 2011இல் கூட இவ்வளவு பயிற்சியாளர்கள் இல்லை. ஆனால் தற்போதைய அணியில் வீரர்களை விட பயிற்சியாளர்கள் அதிகமாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இங்கு பிரச்சனை என்னவெனில் எந்த பயிற்சியாளர் பேச்சைக் கேட்பது என்று இந்திய வீரர்கள் குழம்புவார்கள். அதை விட ஜாம்பவான் பேட்ஸ்மேனான ராகுல் டிராவிட் உங்களிடம் இருக்கும் போது எதற்கு உங்களுக்கு தனியாக பேட்டிங் கோச்? என்பது எனக்கு புரியவில்லை. ஏனெனில் ராகுல் டிராவிட் ஒன்று சொல்வார் விக்ரம் ரத்தோர் மற்றொன்று சொல்வார் என்பதால் அணியில் குழப்பமே ஏற்படும்”

Gavaskar

“எனவே முதலில் நமக்கு எத்தனை பயிற்சியாளர்கள் தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிசிசிஐயிடம் பணம் இருப்பதால் நீங்கள் 50 – 100 பேரை கூட அணியுடன் அனுப்பலாம். ஆனால் அதனால் என்ன பயன் இருக்கிறது?” என்று கூறினார். அவர் கூறுவது போல இந்த தொடரில் விராட் கோலி மற்றும் சூரியகுமார் தவிர்த்து ஆரம்பம் முதலே தடுமாறிய இந்திய பேட்ஸ்மன்களின் ஆட்டத்தில் கடைசி வரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதே போல் ஃபீல்டிங் துறையிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அப்படியானால் வீரர்கள் தங்களது யுக்திக்கு செயல்படுவதும் அதிகப்படியான பயிற்சியாளர்கள் வைத்திருப்பதில் எந்த பயனும் ஏற்படவில்லை என்பதும் இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.

Advertisement