உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 3, 4வது இடங்களை பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. அதில் முதல் அணியாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு தங்களுடைய கடைசி 6 போட்டியில் தொடர்ந்து 6 வெற்றிகளை பதிவு செய்தது. குறிப்பாக கடைசிப் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை தோற்கடித்த பெங்களூரு 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
எனவே அதே வேகத்தில் ராஜஸ்தான் அணியையும் பெங்களூரு தோற்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் சஞ்சு சாம்சன் தலைமையில் ஆரம்பக்கட்ட போட்டிகளில் அபாரமாக செயல்பட்ட ராஜஸ்தான் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் கடைசி 5 போட்டிகளில் அந்த அணி தொடர்ச்சியாக 4 தோல்விகளை பதிவு செய்தது. போதாகுறைக்கு கொல்கத்தாவுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் மழையால் ரத்து செய்யப்பட்டது.
கவாஸ்கர் கணிப்பு:
அதனால் கடைசி 5 போட்டிகளில் ஒரு வெற்றி கூட பதிவு செய்யாத அந்த அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு சரிந்தது. எனவே இப்போட்டியில் நல்ல ஃபார்மில் உள்ள பெங்களூரு அணிக்கு ராஜஸ்தான் சவாலை கொடுக்குமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 11 நாட்களாக ராஜஸ்தான் அணி சரியாக விளையாடாததால் இப்போட்டியில் பெங்களூரு ஒருதலைப் பட்சமாக வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக சுனில் கவாஸ்கர் கனித்துள்ளார்.
இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அபாரத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் ஆர்சிபி செயல்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். முதலில் அவர்கள் கம்பேக் கொடுக்க முடியும் என்று நம்பினார்கள். அதுவே ஸ்பெஷலான விஷயமாகும். டு பிளேஸிஸ், விராட் கோலி போன்ற அணியை முன்னின்று வழிநடத்தக்கூடிய வீரர்கள் இதர வீரர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கின்றனர்”
“அதனால் அனைத்தையும் இழந்து விட்டோம் என்ற சூழ்நிலையிலிருந்து மற்ற வீரர்களும் உடனடியாக மீண்டு வந்து விட்டனர். மறுபுறம் ராஜஸ்தான் அணி தங்களுடைய கடைசி 4 – 5 போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. அவர்கள் பயிற்சிகளை செய்யாமல் நடைமுறையில் இருந்திருப்பார்கள். 11 நாட்களாக சரியாக விளையாடாமல் இருப்பதால் இது ஒரு நல்ல கிணறு போல இருக்கிறது”
இதையும் படிங்க: அம்மா ஹாஸ்பிடலில் இருக்காங்க.. ஆனா அந்த காரணத்துக்காக ஐபிஎல் விளையாட வந்துட்டேன்.. குர்பாஸ் நெகிழ்ச்சி
“எனவே நாளைய எலிமினேட்டர் போட்டி ஒருதலைபட்சமாக இருக்கலாம். குறிப்பாக ஆர்சிபி தனித்துவமான கிரிக்கெட்டை விளையாடுவதால் நாளைய எலிமினேட்டர் ஒருதலைபட்சமாக இருக்கலாம் என்பதே என்னுடைய பயமாகும். ஒருவேளை அது நடைபெறாமல் போனால் நான் மிகவும் ஆச்சரியப்படுவேன்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து மே 22ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நகரில் எலிமினேட்டர் போட்டி துவங்க உள்ளது.



