- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இனிமே பவுலர்ஸ் ஷிவம் துபேவுக்கு எதிராக பந்துவீச கஷ்டப்படுவாங்க.. காரணத்துடன் பாராட்டிய – சுனில் கவாஸ்கர்

நெதர்லாந்து அணிக்கு எதிராக பிப்ரவரி 18-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் 36-வது லீக் போட்டியில் விளையாடியிருந்த இந்திய அணியானது 17 ரன்கள் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக பேட்டிங்கில் ஷிவம் துபே அதிகபட்சமாக 31 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் என 66 ரன்கள் குவித்து அசத்தினார்.

ஷிவம் துபேவிற்கு எதிராக இனி பந்துவீசுவது கடினம் : சுனில் கவாஸ்கர்

அதோடு பந்து வீச்சிலும் 2 விக்கெட்டை கைப்பற்றிய அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. நேற்றைய போட்டியில் ஷிவம் துபே இக்கட்டான நேரத்தில் களமிறங்கி இருந்தாலும் மிடில் ஓவர்களில் அவரது அதிரடியான ஆட்டம் காரணமாக இந்திய அணி நல்ல ரன் குவிப்பை நோக்கி நகர்ந்தது. அவரது இந்த சிறப்பான ஆட்டத்திற்கு பிறகு பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

இவ்வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கரும் ஷிவம் துபேவின் இந்த அதிரடியான ஆட்டம் குறித்த தனது பாராட்டினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஷிவம் துபே இனிவரும் போட்டிகளில் இதைவிட சிறப்பாக ஆடுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இனிமேல் எந்த ஒரு பந்துவீச்சாளரும் அவருக்கு எதிராக பந்துவீச கஷ்டப்படுவார்கள். ஏனெனில் அந்த அளவிற்கு அவரிடம் நல்ல ஷார்ட் செலக்சன் இருக்கிறது.

ஆப் ஸ்டம்பிற்கு வெளியே பந்து வீசினாலும் அவரால் அங்கிருந்து லாங் ஆன் திசையில் வலிமையாக அடிக்க முடிகிறது. அதோடு மிட் விக்கெட், ஸ்கொயர் லெக் என பலமான இடங்களில் அவர் நல்ல ஹிட்டிங் எபிலிட்டியை வைத்திருக்கிறார். அதுமட்டும் இன்றி லாங் ஆப் திசையிலும் அவரால் கவர் ட்ரைவ், இன்சைட் அவுட் ஷாட் ஆகியவற்றை விளையாட முடிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : எதையும் யோசிக்காத.. எல்லாம் சீக்கிரம் மாறும்.. அபிஷேக் சர்மாவுக்கு – ஹர்பஜன் சிங் ஆறுதல்

மைதானத்தின் எந்த ஒரு மூலையிலும் மிகப்பெரிய சிக்ஸர்களை அடிக்கும் வீரராக தற்போது ஷிவம் துபே மாறி வருகிறார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் இந்திய அணிக்கு பலம் சேர்க்கக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது. இனிவரும் போட்டிகளிலும் அவருக்கு எதிராக பந்துவீச பவுலர்கள் கஷ்டப்படப் போகிறார்கள். அந்த அளவிற்கு அவர் மிகச் சிறப்பாக விளையாடி வருவதாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

- Advertisement -