இந்திய அணியின் இளம் அதிரடி துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மா நடப்பு 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று ஆட்டங்களிலும் டக் அவுட்டாகி மோசமான சரிவை சந்தித்துள்ளார். டி20 போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அவர் 200-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டுடன் மிகச் சிறப்பாக விளையாடி வந்தார்.
அபிஷேக் சர்மாவுக்கு ஆறுதல் கூறிய : ஹர்பஜன் சிங்
இதன் காரணமாக இந்த 2026 டி20 உலககோப்பை தொடரில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய மூன்று அணிகளுக்கு எதிராகவும் டக் அவுட்டாகி வெளியேறியிருந்தார். இதனால் அவரது பேட்டிங் ஃபார்ம் மீது சில விமர்சனங்கள் இருந்து வருகின்றன.
ஆனால் அதிலிருந்து அவர் வெளியேறுவார் என்றும் பலர் அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங்கும் அபிஷேக் சர்மாவை தேற்றும் விதமாக அவருக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இதுபோன்ற நிலையை எல்லா வீரர்களுமே சந்திப்பார்கள்.
அப்போது அவர்களுக்குள் பல விடயங்கள் ஓடிக்கொண்டே இருக்கும். நான் சில விடயங்களை அபிஷேக்கிற்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதாவது இந்த பிரச்சனை எல்லாம் கடந்து போய்விடும். அவர் தன்னுடைய திறமையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். சில போட்டிகளில் மீண்டும் ரன் வர ஆரம்பித்து விட்டால் அவருடைய பேட்டிங் மீண்டும் பெரியளவில் பேசப்படும்.
இதையும் படிங்க : தோனி குடுத்த அந்த அட்வைஸ் தான் என்னோட ஆட்டத்தை மாத்துச்சு – ஷிவம் துபே பேச்சு
தற்போது லீக் சுற்று போட்டிகளில் அவர் சொதப்பினாலும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று நம்புகிறேன். போட்டியின் ஆரம்பத்தில் சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு வந்தால் மிட் விக்கெட் திசையை நோக்கி அடிக்க முயற்சிக்காமல் நேராக அடிக்க முயற்சி செய்ய வேண்டும் என ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.



