இந்திய அணியின் இந்த மோசமான தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் காரணமில்லை – சுனில் கவாஸ்கர் கருத்து

Gavaskar
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலியா எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்று தொடரின் முன்னிலையில் உள்ளது. முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 244 ரன்களை குவித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் சிறப்பான பவுலிங் காரணமாக 191 ரன்களுக்கு சுருண்டது.

Ind

- Advertisement -

இதனால் 53 ரன்கள் என்ற ஆரோக்கியமான முன்னிலையில் இருந்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் போது வெறும் 36 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக பேட்டிங் செய்து 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடினர். அதுமட்டுமின்றி ஒருவர் கூட 10 ரன்களை அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பேட்ஸ்மேன்களின் இந்த செயல்பாட்டை அனைவரும் விமர்சித்து வர தற்போது இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவாக தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த தோல்விக்கு பேட்ஸ்மேன்களை மட்டும் விமர்சிப்பது நல்லதல்ல. ஏனெனில் எந்த ஒரு அணி இந்திய அணியின் இடத்தில் எந்த அணி இருந்தாலும் ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்து வீச்சை எதிர்கொள்ள தடுமாறி இருப்பார்கள். அதுமட்டுமின்றி எந்த ஒரு அணியையும் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்கள் கண்டிப்பாக நெருக்கடிக்கு உள்ளாக்கி அவர்களை வீழ்த்தி இருப்பார்கள்.

PatCummins

எனவே இந்திய பேட்ஸ்மேன்களை மட்டும் குற்றம் சொல்வது முற்றிலும் தவறானது என்று ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலிய அணியின் இந்த சிறப்பான வெற்றிக்கு அவர்களது அணியின் சிறப்பான பந்துவீச்சு தான் காரணம். அவர்களது இந்த வெற்றிக்கு அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் முழு காரணம் என்று கவாஸ்கர் கூறினார். குறிப்பாக ஹேசல்வுட் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் முதல் போட்டியில் இந்திய அணியை கதிகலங்க வைத்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement