- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அபிஷேக் சர்மா இப்படி விளையாடுவதை பாக்க ஆச்சரியமா இருக்கு – சுனில் கவாஸ்கர் பாராட்டு

இந்திய அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மா இந்த 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று ஆட்டங்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வேளையில் சூப்பர் 8 சுற்று போட்டியிலாவது பார்மிற்கு திரும்புவாரா? என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது. இந்நிலையில் அபிஷேக் சர்மா தற்போது மீண்டும் பார்முக்கு வரும் வகையில் ஜிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில் அற்புதமாக விளையாடியிருந்தார்.

அபிஷேக் சர்மாவை பாராட்டிய : சுனில் கவாஸ்கர்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது சூப்பர் 8 சுற்று போட்டியின் போது 15 ரன்கள் மட்டுமே குவித்திருந்த வேளையில் அவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகமும் இருந்தது. ஆனால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் துவக்க வீரராக விளையாடிய அவர் 30 பந்திகளில் 55 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் பார்மிற்கு வந்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அவர் விளையாடிய விதம் குறித்து தனது பாராட்டுகளை தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் கூறியதாவது : ஒரு பேட்டராக அபிஷேக் ஷர்மா எவ்வாறு விளையாடுவார்? என்பதை நாம் அறிவோம். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அரைசதம் அடித்ததன் மூலம் அவர் தன் மீது இருக்கும் சந்தேகங்களுக்கு விடை கொடுத்துள்ளார்.

வழக்கமாக அதிரடியாக துவங்கும் அவர் இந்த இன்னிங்சை துவங்குவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டார். அதோடு சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ரிஸ்க்கான ஷார்ட்கள் எதையும் முயற்சிக்காமல் தேவையான பந்துகளை அடித்தும் மற்ற பந்துகளில் தடுப்பாட்டத்தையும் வெளிப்படுத்தினார். இப்படி அதிரடி ஆட்டக்காரர் தடுப்பாட்டத்தில் ஈடுபடுவதை பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : ரோஹித், அஷ்வின், யுவ்ராஜ் சிங் ஆகியோரது சாதனையை சமன் செய்த ஹார்டிக் பாண்டியா – விவரம் இதோ

தனக்கு ஏதுவாக வரும் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டியும் கடினமான பந்துகளை அவர் தடுத்து விளையாடியதையும் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. நிச்சயம் அவரின் இந்த அறிகுறிகளின் மூலம் மிகப்பெரிய அளவில் முன்னேறி செல்வார் என்றும் சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -