குல்தீப், சஹாலை விட 2024 டி20 உ.கோ ஜெயிக்க நமக்கு அவர் தான் ஸ்பின்னரா வேணும்.. கவாஸ்கர் தேர்வு

Sunil Gavaskar 7
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. அதில் 2007க்குப்பின் கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது. அதற்காக நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய சீனியர்களும் இடம் பிடித்துள்ளனர்.

அதே சமயம் ரிங்கு சிங், ஜெய்ஸ்வால், திலக் வர்மா போன்ற இளம் கிரிக்கெட் வீரர்களும் இருப்பதால் 2024 உலகக் கோப்பைக்கான அணியை தேர்வு செய்வதில் மிகப்பெரிய சவால் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் மூத்த வீரர்களுக்கு நிகராக இளம் வீரர்களும் சமீபத்திய தொடர்களில் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டு தங்களால் சாதிக்க முடியும் என்பதை காண்பித்துள்ளனர்.

- Advertisement -

கவாஸ்கர் தேர்வு:
அந்த வரிசையில் 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றிய குல்தீப் யாதவ் 2024 டி20 உலகக் கோப்பையிலும் முதன்மை ஸ்பின்னராக விளையாடுவதற்கு தற்சமயத்தில் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் தம்மை பொறுத்த வரை குல்தீப் யதாவை விட இளம் வீரர் ரவி பிஷ்னோய் முதன்மை ஸ்பின்னர்ராக விளையாடுவது இந்தியாவின் வெற்றியை அதிகப்படுத்தும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னைப் பொறுத்த வரை ரவி பிஷ்னோய் முதன்மை ஸ்பின்னராக இருக்க வேண்டும். ஏனெனில் பவுலிங்கை தவிர்த்து அவர் சிறப்பான ஃபீல்டர். குறிப்பாக குல்தீப் யாதவ், சஹால் ஆகியோரை விட அவர் சிறப்பான ஃபீல்டர். அதே சமயம் அவர் பேட்டிங்கிலும் கொஞ்சம் ரன்கள் அடிக்கக்கூடியவர்”

- Advertisement -

“கடந்த ஐபிஎல் தொடரில் அவர் தன்னுடைய மூளையை கொஞ்சம் பயன்படுத்தி தன்னுடைய அணிக்காக ஒரு போட்டியில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். குறிப்பாக பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கடைசி நேர பரப்பரப்பில் அவரும் ஆவேஷ் கானும் சேர்ந்து லக்னோவுக்காக வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். எனவே என்னைப் பொறுத்த வரை ரவி பிஷ்னோய்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ஸ்லெட்ஜிங் செய்தே நண்பன் ஸ்டீவ் ஸ்மித்.. சோளியை முடித்த டேவிட் வார்னர்.. ஆஸியில் ஸ்வாரஸ்யம்

அதாவது குல்தீப்பை விட டி20 கிரிக்கெட்டில் எக்ஸ்ட்ராவாக ஃபீல்டிங் மற்றும் பேட்டிங் திறமையில் அசத்தும் தன்மையை கொண்டிருப்பதால் பிஷ்னோய் வரும் உலகக் கோப்பையில் முதன்மை ஸ்பின்னராக விளையாடலாம் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் அசத்திய அவர் தொடர்நாயகன் விருது வென்று இந்தியாவை வெற்றி பெற வைத்து டி20 தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராகவும் முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement