ஸ்லெட்ஜிங் செய்தே நண்பன் ஸ்டீவ் ஸ்மித்.. சோளியை முடித்த டேவிட் வார்னர்.. ஆஸியில் ஸ்வாரஸ்யம்

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் புகழ் பெற்ற பிக்பேஷ் கிரிக்கெட் தொடரின் 2024 சீசன் அந்நாட்டில் நடைபெற்று வருகிறது. அதில் ஜனவரி 12ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் சிட்னி தண்டர்ஸ் ஆகிய அணிகள் மோதின. அந்தப் போட்டியில் நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் எதிரெதிர் அணிகளில் விளையாடியது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக கடந்த 10 வருடங்களாக ஆஸ்திரேலியாவின் நிறைய வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய டேவிட் வார்னர் கடந்த வாரம் இதே சிட்னி மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான 3வது போட்டியுடன் ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து டேவிட் வார்னருக்கு பதிலாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் துவக்க வீரராக ஸ்டீவ் ஸ்மித் விளையாடுவார் என்று அந்நாட்டு வாரியம் சமீபத்தில் மறைமுகமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

ஸ்லெட்ஜிங் செய்த வார்னர்:
அந்த சூழ்நிலையில் மெல்போர்ன் நகரில் 2024 ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடரும் நடைபெற்று வருகிறது. அதில் நேற்று முன்தினம் பிரபல வீரர் நோவக் ஜோகோவிச்சுக்கு எதிராக நட்பு ரீதியில் ஸ்டீவ் ஸ்மித் சில பந்துகளை எதிர்கொண்டு டென்னிஸ் போட்டியில் விளையாடியது சமூக வலைதளங்களில் வைரலானது. அதை பயன்படுத்திய டேவிட் வார்னர் இந்த போட்டியில் ஸ்மித் பேட்டிங் செய்ய வந்ததும் நட்பாக ஸ்லெட்ஜிங் செய்தார்.

அத்துடன் பேட்டிங்கை ஃகார்டை எடுக்கும் போது இப்படி அல்ல அப்படி எடுத்தால் தான் என்னுடைய ஓப்பனிங் இடத்தை உங்களால் நிரப்ப முடியும் என்றும் அவரிடம் வம்படியாக டேவிட் வார்னர் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார். இது பற்றி டேவிட் வார்னர் பேசியது பின்வருமாறு. “அவரிடம் (ஸ்மித்) டென்னிஸ் ஸ்விங் இருக்கிறது என்று நினைக்கிறேன். அவரும் நோவாக் ஜோகோவிச்சும் தற்போது நண்பர்களாக உள்ளனர்”

- Advertisement -

“எனவே நாம் டாப் ஸ்பின்னையும் எதிர்பார்க்கலாம். அவருடைய கவனத்தை எதுவுமே சீர்குலைக்க முடியாது. அது நடுவே இல்லை நண்பா (பேட்டிங் கார்ட்). வலது பக்கம் எடு. நண்பா நீ துவக்க வீரராக சிறப்பாக விளையாட வேண்டுமெனில் இதை சரியாக செய். ஒரே முயற்சியில் செய்து முடி” என்று கூறினார். இருப்பினும் அந்த வார்த்தைகளுக்கு எதுவும் பதிலளிக்காமல் பேட்டிங் ஃகார்டை எடுத்த ஸ்மித் முதல் பந்தை எதிர்கொண்டார்.

இதையும் படிங்க: சிவாஜி தி பாஸ் போல.. பிபிஎல் போட்டிக்கு ஹெலிகாப்டரில் மாஸ் என்ட்ரி கொடுத்த ஆஸி வீரர்

ஆனாலும் நண்பன் வார்னருக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் முதல் பந்தையே தூக்கி அடித்த அவர் கேட்ச் கொடுத்து டக் அவுட்டாகி பரிதாபமாக சென்றார். அந்த வகையில் தம்முடைய நண்பனை ஸ்லெட்ஜிங் செய்து டேவிட் வார்னர் அவுட்டாக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement