சிவாஜி தி பாஸ் போல.. பிபிஎல் போட்டிக்கு ஹெலிகாப்டரில் மாஸ் என்ட்ரி கொடுத்த ஆஸி வீரர்

David Warner Helicopter
- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற முடிந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா ஒயிட் வாஷ் செய்து வென்றது. அதனால் 28 வருடங்களாக தொடர்ந்து 17 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை தக்க வைத்த ஆஸ்திரேலியா தரவரிசையில் இந்தியாவை முந்தி உலகின் நம்பர் ஒன் அணியாகவும் முன்னேறியது.

அந்தத் தொடருடன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நட்சத்திர துவக்க வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக 3 வகையான கிரிக்கெட்டிலும் துவக்க வீரராக விளையாடி வந்த அவர் நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து அந்நாட்டு ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

மாஸ் என்ட்ரி:
குறிப்பாக 2015, 2023 ஆகிய உலகக் கோப்பைகளை வெல்வதற்கு உதவிய அவர் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியிலும் அங்கமாக இருந்தார். அந்த வகையில் மகத்தான வீரராக விடைபெற்ற டேவிட் வார்னருக்கு அவருடைய சொந்த ஊரான சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் ஏராளமான ரசிகர்களும் இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் பாராட்டி பிரியா விடை கொடுத்தனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் தற்போது 2024 ஆடவர் பிக்பேஷ் தொடர் கோலாகலமாக துவங்கியுள்ளது. அதில் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக டேவிட் வார்னர் விளையாடி வருகிறார். அத்தொடரின் முதல் போட்டியில் பங்கேற்பதற்கு முன்பாக ஹண்டர் பள்ளத்தாக்கில் உள்ள தம்முடைய சகோதரர் திருமணத்திற்கு டேவிட் வார்னர் சென்றதாக தெரிகிறது.

- Advertisement -

அந்த விழாவுக்கு சென்ற வார்னர் மாலை 5 மணிக்குள் முதல் போட்டி நடைபெறும் சிட்னி மைதானத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். அதனால் திருமணத்தை முடித்துக் கொண்டு உடனடியாக ஒரு ஹெலிகாப்டரை எடுத்த வார்னர் அங்கிருந்து வானில் பறந்து தாம் கடைசியாக டெஸ்ட் போட்டியில் விளையாடி விடைபெற்ற சிட்னி மைதானத்திற்கு வந்தார். குறிப்பாக சிவாஜி தி பாஸ் தமிழ் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருவது போல அவர் களமிறங்கியது அங்கிருந்த செய்தியாளர்கள் மற்றும் இதர வீரர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க: 6 வருடம் கழித்து மிரட்டல் கம்பேக்.. 1.92 எக்கனாமியில் பெங்காலை அலறவிடும் ஸ்விங் கிங் புவனேஷ்வர் குமார்

அந்த வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைத் தொடர்ந்து பிபிஎல் தொடரில் விளையாடும் டேவிட் வார்னர் 2024 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்காக விளையாட உள்ளார். அதன் பின் இன்னும் சில வருடங்கள் பிபிஎல் மற்றும் துபாயில் நடைபெறும் ஐஎல் டி20 தொடரில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement