6 வருடம் கழித்து மிரட்டல் கம்பேக்.. 1.92 எக்கனாமியில் பெங்காலை அலறவிடும் ஸ்விங் கிங் புவனேஷ்வர் குமார்

Bhuvneswar Kumar 2
- Advertisement -

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2024 ரஞ்சிக் கோப்பையில் ஜனவரி 12ஆம் தேதி உத்திரபிரதேசம் மற்றும் பெங்கால் அணிகள் மோதிய 24வது லீக் போட்டி துவங்கியது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் இருக்கும் கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்கால் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

ஆனால் அதைத்தொடர்ந்து களமிறங்கிய உத்திரபிரதேசம் ஆரம்பத்தில் இருந்தே பெங்கால் பவுலர்களின் அட்டகாசமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 20.5 ஓவரில் வெறும் 60 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக சாம்ராட் சிங் 13 ரன்கள் எடுக்க பெங்கால் சார்பில் அதிகபட்சமாக சிந்து ஜெய்ஸ்வால் 3, முகமது கைஃப் 4, இஷான் போரேல் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

ஸ்விங் கிங் இஸ் பேக்:
அதைத்தொடர்ந்து களமிறங்கிய பெங்கால் அணிக்கு 32 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்சிப் அமைத்து சவாலை கொடுக்க முயற்சித்த சௌரவ் பாலை 13 ரன்களில் அவுட்டாக்கிய நட்சத்திர அனுபவ வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் அடுத்ததாக வந்த சுதீப் கராமியை டக் அவுட்டாக்கினார். அத்துடன் மஜும்தார் 12, கேப்டன் மனோஜ் திவாரி 3, அபிஷேக் போரேல் 12 என 3 முக்கிய பேட்ஸ்மேன்களை சீரான இடைவேளைகளில் புவனேஸ்வர் குமார் சொற்ப ரன்களில் காலி செய்தார்.

அதனால் திடீரென 82/5 என சரிந்த பெங்கால் முதல் நாள் முடிவில் 95/5 ரன்கள் எடுத்து தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பேட்டிங்கில் கோட்டை விட்ட தம்முடைய மாநில அணியை இப்போட்டியில் வெற்றி பெற வைப்பதற்காக போராடும் புவனேஸ்வர் குமார் இதுவரை பெங்கால் இழந்த 5 விக்கெட்களை எடுத்து மிரட்டி வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக ஒரு கட்டத்தில் இந்திய அணிக்கே முதன்மை பவுலராக இருந்த அவர் 2018 தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் காயமடைந்து வெளியேறினார். அதன் பின் குணமடைந்தும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்த அவர் சவாலான டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவில்லை. அதனாலேயே இந்திய டெஸ்ட் அணியிலும் கழற்றி விடப்பட்ட அவர் தற்போது ரஞ்சிக் கோப்பையில் 6 வருடங்கள் கழித்து முதல் முறையாக இந்த போட்டியில் தான் களமிறங்கியுள்ளார்.

இதையும் படிங்க: அறுவை சிகிச்சைக்கு பிறகு தனது உடற்தகுதி குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட – சூரியகுமார் யாதவ்

அதில் முதல் நாளிலேயே 13 ஓவர்களில் 3 மெய்டன் உட்பட 25 ரன்கள் மட்டும் கொடுத்துள்ள அவர் 5* விக்கெட்டுகளை 1.92 என்ற துல்லியமான எடுத்து பெங்காலை அலற விட்டு வருகிறார் என்றே சொல்லலாம். அந்த வகையில் ஸ்விங் கிங் என்பதை தற்போதும் நிரூபிக்கும் புவனேஸ்வரி குமார் 33 வயது மட்டுமே நிரம்பியவர் என்பதால் மீண்டும் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Advertisement