ஒரு மோசமான நாளை தவிர்த்து மாஸ் தான்.. 2023இல் இந்திய அணி செயல்பாடுகள் பற்றி கவாஸ்கர் கருத்து

Sunil Gavaskar 55
- Advertisement -

உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் வரவேற்புடன் 2024 புத்தாண்டு கோலாகலமாக துவங்கியுள்ளது. அதில் 2023ஆம் ஆண்டு கற்ற பாடங்களை மனதில் வைத்து அனைவரும் சிறப்பாக செயல்பட தயாராகியுள்ளனர். அந்த வரிசையில் சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை கிரிக்கெட் அணியாக திகழும் இந்தியா 2023ஆம் ஆண்டு சந்தித்த தோல்விகளில் இருந்து பாடங்களை கற்று 2024 வருடத்தில் வெற்றிக்காக களமிறங்க உள்ளது.

குறிப்பாக கடந்த வருடம் இருதரப்பு தொடர்களில் எதிரணிகளை சொல்லி அடித்த இந்தியா டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான ஐசிசி தரவரிசையிலும் ஒரே சமயத்தில் நம்பர் ஒன் இடம் பிடித்த அணி என்ற தனித்துவமான உலக சாதனையை படைத்தது. அத்துடன் சொந்த மண்ணில் ஒரு ஃபைனலுக்கே தகுதி பெறுவதற்கு இங்கிலாந்து திண்டாடும் நிலையில் அடுத்தடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற்று இந்தியா அசத்தியது.

- Advertisement -

நல்ல வருடம்:
மேலும் 2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகளை தெறிக்க விட்டு கோப்பையை வென்ற இந்தியா உலக சாதனைகளையும் படைத்தது. இருப்பினும் முக்கியமான டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் சொதப்பிய இந்தியா 2023 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்றும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை கோட்டை விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இந்நிலையில் உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெறும் அளவுக்கு 2023 வருடத்தில் இந்திய அணி அசத்தியதாக சுனில் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இருப்பினும் ஃபைனல் நாள் மோசமாக அமைந்து தோல்வி கிடைத்ததாக தெரிவிக்கும் அவர் மற்ற படி மகளிர் கிரிக்கெட்டிலும் 2023 வருடம் இந்திய அணிக்கு சிறப்பாக அமைந்ததாக கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த வருடம் நமது ஆடவர் மற்றும் மகளிர் அணிக்கு சிறப்பாக அமைந்ததாகவே நான் கருதுகிறேன். குறிப்பாக மகளிர் அணியினர் சிறப்பாக செயல்பட்டார்கள். அவர்கள் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்த வருடம் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி கண்டனர். இதற்கு முன்பாக மகளிர் கிரிக்கெட்டில் அந்த அணிகளுக்கு எதிராக இந்தியா தடுமாறி வந்தது”

இதையும் படிங்க: ரபாடா மாதிரி திறமை இருந்தும் மிஸ் பண்ணிட்டீங்களே.. இந்திய வீரர் மீது இர்ஃபான் பதான் ஆதங்கம்

“ஆடவர் கிரிக்கெட்டில் உலகக் கோப்பையில் நாம் என்ன பார்த்தோம் என்பதை தவிர்த்து இந்த வருடம் நமக்கு நன்றாகவே அமைந்தது. நாம் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்றோம். இருப்பினும் ஒரு மோசமான நாள் அமைந்தது. அது உலகக் கோப்பை ஃபைனலாக அமைந்தது சோகமாக இருந்தது. இருப்பினும் 2023 வருடத்தில் ஆர்வமான நேரங்கள் இருந்தன” என்று கூறினார்.

Advertisement