அது ஒலிம்பிக் மாதிரி இருக்கு.. இந்தியா நடத்தும் தொடருக்கு ஆஸி வீரர் ஜஸ்டின் லாங்கர் பாராட்டு

Justin Langer 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது. அதில் தேவையான வீரர்களை வாங்கியுள்ள அனைத்து அணிகளும் 2024 சீசனில் கோப்பையை வெல்வதற்காக தயாராகியுள்ளன. கடந்த 2008ஆம் ஆண்டு சாதாரண டி20 தொடராக துவங்கப்பட்ட ஐபிஎல் 15 வருடங்கள் கழித்து இன்று சர்வதேச கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அங்கமாக உருவெடுத்துள்ளது.

மேலும் தரத்தில் ஐசிசி நடத்தும் உலகக் கோப்பைக்கு நிகராக பெரும்பாலான ஐபிஎல் போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று ரசிகர்களுக்கு விருந்து படைப்பது வழக்கமாகும். அதனால் ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பையை விட ஐபிஎல் மிகச் சிறந்த தொடர் என்று சுனில் கவாஸ்கர், ஏபி டீ வில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான்கள் கடந்த காலங்களில் பாராட்டியுள்ளனர்.

- Advertisement -

ஒலிம்பிக்கிற்கு நிகர்:
அத்துடன் ஐபிஎல் தொடரால் தற்போது ஒரே சமயத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 2 அணிகளை களமிறக்கி எதிரணிகளுக்கு சவாலை கொடுக்கும் அளவுக்கு இந்தியா தரம் உயர்ந்துள்ளது. அதே சமயம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நிறைய வெளிநாடுகளுக்கும் தரமான அடுத்த தலைமுறை வீரர்களை ஐபிஎல் கண்டறிந்து கொடுத்து வருகிறது.

அது போக ஐபிஎல் தொடரால் பல்வேறு வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது என்றும் சொல்லலாம். அந்த வகையில் இந்தியா நடத்தும் ஐபிஎல் தொடர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு நிகரான தரத்தையும் வரவேற்பையும் கொண்டுள்ளதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஜஸ்டின் லாங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

2024 சீசனில் முதல் முறையாக லக்னோ அணியின் பயிற்சியாளராக செயல்பட உள்ள அவர் இது பற்றி அந்த அணி நிர்வாகத்தின் ட்விட்டர் பக்கத்தில் பேசியுள்ளது பின்வருமாறு. “ரிக்கி பாண்டிங்கிடம் இதைப் பற்றி நான் நீண்ட காலமாக பேசியுள்ளேன். அவர் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் பணியாற்றி எந்தளவுக்கு ஐபிஎல் தொடரை விரும்புகிறார் என்ற தம்முடைய அனுபவத்தை என்னிடம் கூறியுள்ளார்”

இதையும் படிங்க: ரபாடா மாதிரி திறமை இருந்தும் மிஸ் பண்ணிட்டீங்களே.. இந்திய வீரர் மீது இர்ஃபான் பதான் ஆதங்கம்

“அதே போல என்னுடைய மற்றொரு நண்பர் டாம் மூடி ஐபிஎல் தொடரின் ஒரு அங்கமாக இருந்து வருகிறார். ஐபிஎல் என்பது ஒலிம்பிக் போட்டிகளைப் போல மிகவும் பெரியது. இதில் ஒவ்வொரு போட்டிகளும் தரமாகவும் அனைவரிடமும் நல்ல வரவேற்பையும் ஆதரவையும் பெற்றுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் ஐபிஎல் மிகவும் விரும்பப்படுகிறது. எனவே அந்தத் தொடரில் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்புக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement