ரபாடா மாதிரி திறமை இருந்தும் மிஸ் பண்ணிட்டீங்களே.. இந்திய வீரர் மீது இர்ஃபான் பதான் ஆதங்கம்

Irfan Pathan 4
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. இத்தனைக்கும் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தும் கொஞ்சம் கூட போராடாமல் தோல்வியை சந்தித்த இந்தியா முதல் முறையாக தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டுள்ளது.

அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்து 6வது இடத்திற்கு சரிந்துள்ள இந்தியா குறைந்தபட்சம் இத்தொடரை சமன் செய்ய கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது. முன்னதாக சென்சூரியன் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் பிரசித் கிருஷ்ணா மற்றும் சர்துள் தாக்கூர் ஆகியோர் சுமாராக பந்து வீசி ரன்களை வாரி வழங்கியது தோல்விக்கு முதன்மை காரணமாக அமைந்தது.

- Advertisement -

ரபாடா மாதிரி:
குறிப்பாக காயமடைந்த முகமது ஷமிக்கு பதிலாக அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற பிரசித் கிருஷ்ணா 19 ஓவரில் 93 ரன்கள் வாரி வழங்கி அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார். அதன் காரணமாக ஜூன் 3ஆம் தேதி கேப் டவுன் நகரில் துவங்க உள்ள இத்தொடரின் 2வது போட்டியில் அவர் அதிரடியாக நீக்கப்பட்டு முகேஷ் குமார் சேர்க்கப்படுவார் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் ரபாடா போல நல்ல உயரத்துடன் சிறப்பாக பந்து வீசும் திறமை கொண்டிருந்தும் முதல் போட்டியில் பிரசித் கிருஷ்ணா ஏமாற்றத்தை கொடுத்ததாக இர்பான் பதான் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். மேலும் அறிமுகப் போட்டியில் பதற்றமான சூழ்நிலையில் அவர் செய்த தவறு பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இர்பான் பதான் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“சென்சூரியன் மைதானத்தில் பிரசித் கிருஷ்ணா சிறப்பாக பந்து வீசியிருக்கலாம். ஏனெனில் அவருடைய லென்த் தென் ஆப்பிரிக்க மைதானங்களில் கச்சிதமாக இருக்கும். குறிப்பாக ரபாடா பந்து வீசும் உயரத்தை பார்க்கும் போது பிரசித் கிருஷ்ணாவும் கிட்டத்தட்ட அதே லென்த்தில் ஃபுல்லாக வீசுகிறார். ஆனால் டிரைவ் அடிப்பதற்கான லென்த்தை அவர் முதல் டெஸ்டில் வீசி பார்க்க முடியவில்லை”

இதையும் படிங்க: பிடிச்ச 2 இந்திய ப்ளேயர்ஸ் அவங்க தான்.. அவரோட டெக்னிக்கை காப்பி பண்ணுவேன்.. தெ.ஆ வீரர் பேட்டி

“அவர் பிட்ச்சை கடினமாக அடிக்காமல் சுமாரான பந்துகளை வீச முயற்சிக்கிறார். ஒருவேளை அவர் பிட்ச்சில் கடினமாக பந்தை அடித்தால் அதிக சாதகத்தை பெற்றிருக்கலாம். ஒருவேளை தன்னுடைய முதல் போட்டியில் விளையாடிய பதற்றத்தால் அவர் அதை செய்ய தவறியிருக்கலாம். அந்த அட்ஜஸ்ட்மெண்டை அவர் செய்யவில்லை. இருப்பினும் 2வது போட்டியில் வாய்ப்பு கிடைத்தால் அதை அவர் செய்வார் என்று நான் நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement