
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் இருக்கிறார். அதனால் 10 வருடங்கள் கழித்து ரஞ்சிக் கோப்பையில் விளையாடும் முடிவை அவர் எடுத்தார். ஆனால் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக களமிறங்கிய அவர் 3, 28 என மொத்தமாக 35 ரன்கள் கூட தாண்டாமல் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஏமாற்றத்தையே கொடுத்தார்.
அவரைப் போலவே ஜெய்ஸ்வால், கேப்டன் ரகானே, ஸ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினார்கள். அதனால் சர்துள் தாகூர் சதத்தை அடித்தும் மும்பை அணியை ஜம்மு காஷ்மீர் தோற்கடித்தது. மறுபுறம் 42 முறை சாம்பியன் மற்றும் நடப்பு சாம்பியனான மும்பை 11 வருடங்கள் கழித்து ஜம்மு காஷ்மீர் அணியிடம் பரிதாபமாக தோற்றது.
அந்த வகையில் ரோகித் சர்மா வந்த நேரம் பார்த்து மும்பை இப்படி பரிதாபமாக தோற்றது. இந்நிலையில் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் சுமாராக விளையாடிய ரோகித் சர்மா ரஞ்சிக் கோப்பையிலும் முன்னேற்றிய ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று சுனில் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் ரஞ்சிக் கோப்பையில் கட்டாயம் விளையாட வேண்டும் என்ற பிசிசிஐ விதிமுறைக்கு பயந்து கடந்த போட்டிகளில் சதத்தை அடித்த இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே வாய்ப்பை மும்பை அணியில் ரோஹித் எடுத்துக் கொண்டதாகவும் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் கூறியது பின்வருமாறு. “மும்பை டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகள் இப்போதெல்லாம் நிதானமாக விளையாடாமல் அதிரடியாக விளையாடி ஆல் அவுட்டாகும் ஆட்டத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. ஃபிளாட்டான பிட்ச்களில் அது வேலை செய்யும். ஆனால் பவுலிங் செய்வதற்கு கொஞ்சம் சாதகமான ஆடுகாலங்களில் நீங்கள் அசத்துவதற்கு டெக்னிக் வேண்டும்”
“கடந்த சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியிடம் இதே போன்ற ஆட்டத்தை நாம் பார்த்தோம். அங்கே கொஞ்சம் நங்கூரமாக விளையாடி 50 ரன்கள் குவித்திருந்தால் தொடரின் முடிவே வேறு மாதிரி அமைந்திருக்கலாம். அவர்கள் (ரோஹித், ஜெய்ஸ்வால்) ரஞ்சிக் கோப்பையில் இதயத்தில் இருந்து விளையாடினார்களா அல்லது ரஞ்சிக் கோப்பையில் விளையாடாததால் பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து ஸ்ரேயாஸ், இஷான் கிசான் நீக்கப்பட்டது போன்ற முடிவை தவிர்க்க வேண்டும் என்பதற்காக விளையாடினார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்”
இதையும் படிங்க: அண்டர்-19 மகளிர் உ.கோ: 208 ரன்ஸ்.. திரிஷா வரலாற்று உலக சாதனை.. ஸ்காட்லாந்தை தூளாக்கிய இந்தியா
“ரோஹித், ஜெய்ஸ்வால் விளையாடியது கடந்த சில போட்டிகளில் சதத்தை அடித்த ஆயுஸ் மாத்ரேவின் வாய்ப்பை பறித்தது. அவர்களால் வாய்ப்பை இழந்த மாத்ரே அவர்களிடம் அனுபவத்தைப் பெற்றிருப்பார் என்று நம்புகிறேன். அவர்களைப் போல விராட் கோலி, சிராஜ் ஆகியோர் அடுத்த ரவுண்டிலாவது விளையாடுவார்களா என்பதையும் பார்க்க வேண்டும்” எனக் கூறினார்.