- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரிஷப் பண்ட் இந்தியாவை ஜெயிக்க வெச்சுருக்க முடியும்.. ஆனா செய்ய மாட்டாரு.. நிஜமான கவாஸ்கர் கணிப்பு

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. அந்த போட்டியில் 2வது நாள் முடிவில் 128-5 ரன்கள் எடுத்த இந்தியாவுக்கு களத்தில் ரிஷப் பண்ட் – நித்திஷ் ரெட்டி இருந்தார்கள்.

அப்போது அந்த இருவரும் சேர்ந்து 100 – 150 ரன்கள் இலக்காக நிர்ணயிக்க உதவுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் அந்த இலக்கை நிர்ணயத்திருந்தால் 3வது நாள் இரவு வேளையில் இளஞ்சிவப்பு பந்தில் பும்ரா, சிராஜ் சவாலை கொடுத்து இந்தியாவை வெற்றி பெற வைக்கப் போராடி இருப்பார்கள். ஆனால் மூன்றாவது நாள் காலையிலேயே ரிஷப் பண்ட் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

ஏமாற்றிய பண்ட்:

ஆனால் மறுபுறம் பொறுப்புடன் விளையாடிய நித்திஷ் ரெட்டி 42 ரன்கள் குவித்து குறைந்தபட்சம் இந்தியாவை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினார். முன்னதாக அப்போட்டியில் ரிவர்ஸ் ஸ்வீப் வாயிலாக அட்டகாசமான பவுண்டரிகளை பறக்க விட்ட ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய அணிக்கு ஆச்சரியத்தை கொடுத்த நன்கு செட்டிலாகியிருந்தார்.

அதனால் ரிஷப் பண்ட் இந்தியாவை வெற்றி பெற வைப்பாரா? என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த வர்ணனையாளர் மார்க் நிகோலஸ் 2வது நாள் மாலையில் கேட்டார். அதற்கு முடியும் ஆனால் அவர் அதை செய்ய மாட்டார் என்று சுனில் கவாஸ்கர் பதிலளித்தார். இது பற்றி நேரலையில் அவர் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் பேட்டிங் மிகவும் பொழுதுபோக்காக இருக்கிறது என்பதில் எந்த கேள்வியும் இல்லை”

- Advertisement -

உண்மையான கணிப்பு:

“ஆனால் பழைய காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டை தவிர்த்து வேறு போட்டிகள் இருக்காது. டெஸ்ட் கிரிக்கெட்டை தவிர்த்தால் நீங்கள் ரஞ்சிக்கோப்பை அல்லது கிளப் கிரிக்கெட்டுக்கு விளையாடச் செல்ல வேண்டும். ஆனால் தற்போது ஐபிஎல், காண்ட்ராக்ட் சிஸ்டம் போன்றவை போன்றவை இருப்பதால் இந்த ஸ்டைலில் விளையாடுகிறீர்கள். அதனால் சுமாராக விளையாடி இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டால் கூட உங்களுக்கு ஐபிஎல் இருக்கிறது”

இதையும் படிங்க: தனக்கு தானே தடுமாறும் கேப்டன் இந்தியாவுக்கு தேவையில்ல.. இதை செய்ங்க.. ரோஹித்துக்கு ஹர்பஜன் அட்வைஸ்

“இப்போட்டியை அவரால் இந்திய அணிக்காக வெல்ல வைக்க முடியும். ஆனால் அவர் செய்ய மாட்டார்” என்று கூறினார். அதாவது 2025 ஐபிஎல் தொடரில் 27 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட்டுக்கு இந்தியாவை எப்படியாவது வெற்றி பெற வைத்தே தீர வேண்டும் என்ற கவலையிருக்காது என கவாஸ்கர் சொன்னார். இறுதியில் அவருடைய கணிப்பை உண்மையாக்கும் வகையில் ரிஷப் பண்ட் 3வது நாள் காலையிலேயே அவுட்டான ரிஷப் பண்ட் இந்தியாவின் வெற்றிக்கு போராடவில்லை.

- Advertisement -