அவங்க இருக்கப்போ பாகிஸ்தானால் ஐபிஎல், இந்தியர்கள் தூக்கத்தையும் தொட முடியாது.. கவாஸ்கர் நம்பிக்கை

Sunil Gavaskar 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி எல்லைப் பிரச்சினை காரணமாக 2008 முதல் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை நிறுத்தி வைத்துள்ளது. மேலும் 2012க்குப்பின் இருதரப்பு தொடர்களில் மோதுவதையும் நிறுத்தியுள்ள இந்தியா ஐசிசி மற்றும் ஆசிய தொடர்களில் மட்டுமே பாகிஸ்தானுடன் விளையாடி வருகிறது. அதனாலேயே 2023 ஆசிய, 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடர்களில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத இந்தியா தங்களது போட்டிகளை இலங்கை, துபாயில் விளையாடி வெற்றியும் கண்டது.

அந்த சூழ்நிலையில் ஜம்மு காஷ்மீரில் சில வாரங்களுக்கு பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் எல்லை கடந்து இந்திய சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தினர். அதில் 26 அப்பாவி இந்தியர்கள் இயற்கை எய்தியது ஒட்டுமொத்த மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அதனால் கோபமடைந்த இந்திய அரசு சிந்துநதியில் தண்ணீரை நிறுத்தியது முதல் யூடியூப் சேனல்களுக்கு தடை விதித்தது வரை பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

- Advertisement -

பாகிஸ்தானால் தொட முடியாது:

அதன் காரணமாக மீண்டும் எல்லையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்கள் நடத்தி வருகிறார்கள். அதற்கு இந்திய ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள். இருப்பினும் இந்த பதற்றமான சூழ்நிலையில் மக்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை இந்திய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த பதற்றமான சூழ்நிலைகளை கண்டு ஐபிஎல் 2025 தொடரில் வெளிநாட்டு வீரர்கள் யாரும் பயப்பட வேண்டியதில்லை என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏனெனில் இந்திய ராணுவம் இருக்கும் வரை பாகிஸ்தானை சேர்ந்தவர்களால் ஐபிஎல் தொடரையும் இந்தியர்களின் தூக்கத்தையும் தொட முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி கவாஸ்கர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

கவாஸ்கர் நம்பிக்கை:

“தற்சமயத்தில் ஏதேனும் நடக்கும் வரை எதுவும் ஐபிஎல் தொடரை பாதிக்கும் என்று நான் கருதவில்லை. ஆம் மாலை நேரங்களில் நடைபெறும் போட்டிகளின் போது போட்டி நடைபெறும் நகரங்களில் பாதுகாப்பு குழுவினரின் பயிற்சிகள் இருக்கலாம். அது கொஞ்சம் கவலையாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் தற்போதைய நிலவரப்படி அது ஐபிஎல் தொடரை பாதிக்கும் என்று நான் நினைக்கவில்லை”

இதையும் படிங்க: கேட்டு வாங்குன இடத்துலயே அவர் சரியா ஆடல.. இதுல் கேப்டன்சி வேறயா? அதெல்லாம் சுப்மன் கில்லுக்கு செட்டாகாது – விவரம் இதோ

“இந்தியாவில் அனைவரும் பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்று நினைக்கிறேன். இங்கே எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. நமக்கு தரைப்படை, விமானப்படை, கப்பற்படை இருக்கிறது. அவர்களால் நாம் இத்தனை நாட்களாக ஒவ்வொரு நாளும் நிம்மதியாக தூங்கி வருகிறோம். அவர்கள் மீது மிகுந்த தன்னம்பிக்கை இருக்கிறது. அவர்கள் மீது அன்பும் பாசமும் இருக்கிறது. இத்தனை வருடங்களாக நாங்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகிறோம். அந்த நம்பிக்கையில் எந்த வெளிநாட்டு வீரர்களும் பாதுகாப்பற்றவர்களாக உணர வேண்டிய அவசியமில்லை” எனக் கூறினார்.

Advertisement