கேட்டு வாங்குன இடத்துலயே அவர் சரியா ஆடல.. இதுல் கேப்டன்சி வேறயா? அதெல்லாம் சுப்மன் கில்லுக்கு செட்டாகாது – விவரம் இதோ

Shubman Gill
- Advertisement -

இந்தியாவில் 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இந்த ஐபிஎல் தொடர் முடிவடைந்த கையோடு இந்திய அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்படும் என்று கூறப்படும் வேளையில் இந்த இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சுப்மன் கில்லுக்கு தற்போது டெஸ்ட் கேப்டன்சி செட்டாகாது :

அதிலும் குறிப்பாக தற்போது 38 வயதை எட்டியுள்ள ரோஹித் சர்மா தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதால் இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்படுவாரா? அல்லது அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய கேப்டன் அறிவிக்கப்படுவார்களா? என்ற கேள்வியும் அனைவரது மத்தியிலும் இருக்கிறது.

- Advertisement -

ஆனாலும் ரோகித் சர்மா தான் தற்போதைக்கு ஓய்வு பெறவில்லை என்று தெரிவித்துள்ளதால் அவரே நிச்சயம் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிகிறது. ஆனாலும் இந்திய அணியின் அடுத்த நிரந்தர டெஸ்ட் கேப்டனை உருவாக்கும் முயற்சியில் இருக்கும் பிசிசிஐ சுப்மன் கில்லை அடுத்த கேப்டனாக கொண்டு வரலாம் என்று பலராலும் பேசப்பட்டது.

ஆனால் தற்போதைக்கு டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை ஏற்கும் அளவிற்கு இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்ற புள்ளிவிவரம் வெளியாகி உள்ளது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை ஆரம்பத்தில் துவக்க வீரராக களம் இறங்கிய அவர் வெளிநாட்டு மண்ணில் ஒரே ஒரு இன்னிங்சில் மட்டும் தான் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

மற்றபடி இந்திய மண்ணில் தான் அவரது சிறப்பான இன்னிங்ஸ்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் வந்துள்ளன. அதுமட்டுமின்றி புஜாராவின் மூன்றாம் இடத்தை கேட்டு பெற்ற அவர் அந்த மூன்றாவது இடத்தில் இதுவரை பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. அதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட் அவரது தடுமாற்றம் தொடர்ச்சியாக இருந்து தான் வருகிறது.

இதையும் படிங்க : விராட் கோலிக்கு அடுத்து இரண்டாவது வீரராக ஐ.பி.எல் வரலாற்றில் மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – ரோஹித் சர்மா

எனவே இந்திய அணியின் எதிர்கால கேப்டனாக பார்க்கப்படும் அவரை நிரந்தர கேப்டனாக மாற்ற முயற்சிகள் தற்போதுக்கு நடைபெறாது என்றும் இன்னும் சில ஆண்டுகள் கழித்து தான் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதே கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

Advertisement