WTC Final : ஐபிஎல் நமக்கு கவலையை தான் கொடுத்துருக்கு, அவர தவிர்த்து யாரும் தயாரா இல்ல – இந்திய அணியை எச்சரித்த கவாஸ்கர்

- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை 2 மாதங்களாக மகிழ்வித்து வந்த ஐபிஎல் 2023 டி20 தொடர் நிறைவு பெற்றுள்ளது. அதில் நடப்பு சாம்பியன் குஜராத்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த சென்னை 5வது கோப்பையை வென்று வெற்றிகரமான அணி என்ற மும்பையின் ஆல் டைம் சாதனையை சமன் செய்தது. இதைத்தொடர்ந்து வரும் ஜூன் 7 – 11 வரை இங்கிலாந்தில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்காக இந்திய வீரர்கள் லண்டனுக்கு புறப்படுகின்றனர். சொல்லப்போனால் லீக் சுற்றுடன் வெளியேறிய அணியிலிருந்த விராட் கோலி, அஷ்வின் போன்றவர்கள் முதல் கட்டமாக கடந்த வாரமே லண்டன் சென்று விட்டனர்.

IND vs AUS

- Advertisement -

அதே போலே பிளே ஆஃப் சுற்றுடன் வெளியேறிய கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் சமீபத்தில் சென்ற நிலையில் ஃபைனலில் விளையாடிய ரவீந்திர ஜடேஜா, ரகானே போன்றவர்கள் விரைவில் இங்கிலாந்துக்கு பறக்க உள்ளனர். அதைத்தொடர்ந்து தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபடும் இந்திய அணியினர் மாபெரும் ஃபைனலில் வலுவான ஆஸ்திரேலியாவை தோற்கடித்து கோப்பையை வெல்ல போராட உள்ளனர். முன்னதாக கடந்த வருடம் இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் வென்று தேவையான பயிற்சிகளை எடுத்து முழுமையாக தயாரான கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து ஃபைனலில் களமிறங்கியது.

கவாஸ்கர் எச்சரிக்கை:
மறுபுறம் இப்போது போலவே 10 நாட்கள் முன்பாக இங்கிலாந்துக்கு பயணித்து வலைப்பயிற்சிகளை மட்டும் எடுத்து நேரடியாக ஃபைனலில் களமிறங்கிய விராட் கோலி தலைமையிலான இந்தியா முழுமையாக தயராமல் களமிறங்கியது நியூசிலாந்திடம் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்தது. அந்த நிலையில் 99% இந்திய வீரர்கள் ஐபிஎல் டி20 தொடரில் விளையாடிவிட்டு நேரடியாக முற்றிலும் மாறுபட்ட இங்கிலாந்து சூழ்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று சுனில் கவாஸ்கர் கவலையை தெரிவித்துள்ளார்.

Sunil Gavaskar Pujara

மேலும் கடந்த 2 மாதங்களாக கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடும் புஜாரா மட்டுமே இந்த ஃபைனலுக்கு முழுமையாக தயாராக உள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பெரும்பாலான இந்திய வீரர்கள் டி20 கிரிக்கெட்டில் விளையாடிவிட்டு நேரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்குவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று நினைக்கிறேன். குறிப்பாக இந்திய அணியில் புஜாரா மட்டுமே கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடினார். எனவே அவர் மட்டுமே சமீபத்தில் சவாலான இங்கிலாந்து சூழ்நிலையில் விளையாடிய அனுபவத்தை கொண்டுள்ளார். ஆனால் பெரும்பாலான வீரர்கள் விளையாடாதது நிச்சயமாக இந்திய அணிக்கு சவாலாக இருக்கும்” என்று கூறினார்.

- Advertisement -

அதே போல் நீண்ட நாட்கள் கழித்து சமீபத்திய ரஞ்சிக் கோப்பையில் 634 ரன்களை 57.63 என்ற சராசரியில் எடுத்து ஐபிஎல் தொடரில் சென்னைக்காக அட்டகாசமாக செயல்பட்டு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள அஜிங்க்ய ரகானே ஏற்கனவே இங்கிலாந்தில் விளையாடிய அனுபவத்தை கொண்டுள்ளதால் நிச்சயமாக அசத்துவார் என்று நம்பிக்கை தெரிவிக்கும் கவாஸ்கர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.

Ajinkya Rahane WTC Final

“அவர் ஏற்கனவே இங்கிலாந்தில் விளையாடிய அனுபவத்தையும் நிறைய ரன்கள் குவித்த திறமையும் கொண்டுள்ளார். எனவே அவர் இந்த ஃபைனலில் 5வது இடத்தில் முக்கியமான வேலையை செய்வார் என்று நம்புகிறேன். அத்துடன் தமக்கு கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பில் அவர் தம்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறார் என்று நினைக்கிறேன். இப்போதும் நிறைய கிரிக்கெட்டை தமக்குள் வைத்திருக்கும் அவருக்கு இது நல்ல வாய்ப்பாகும்”

இதையும் படிங்க:மும்பை மருத்துவமனையில் அடுத்த வாரம் அட்மிட் ஆகப்போகும் தல தோனி? உறுதியான தகவல் – என்ன ஆச்சு அவருக்கு?

“இப்படிப்பட்ட வாய்ப்பை தன்னுடைய அனுபவத்தால் முழுமையாக பயன்படுத்தி இந்திய அணியில் மீண்டும் ஒரு நிலையான இடத்தை அவர் பிடிப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என கூறினார். இதைத்தொடர்ந்து ஃபைனலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் ரசிகர்களும் ஐபிஎல் கொண்டாட்டத்திலிருந்து வெளியே வந்து இந்தியாவுக்காக ஆதரவு கொடுக்க தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement