மும்பை மருத்துவமனையில் அடுத்த வாரம் அட்மிட் ஆகப்போகும் தல தோனி? உறுதியான தகவல் – என்ன ஆச்சு அவருக்கு?

Dhoni-1
- Advertisement -

இந்தியாவில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணியானது குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 5 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அதிகமுறை ஐ.பி.எல் கோப்பையை வென்ற மும்பை அணியின் சாதனையை சமன் செய்தது.

CSK vs GT

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் சி.எஸ்.கே அணியை அற்புதமாக வழிநடத்தி இறுதிவரை கொண்டு சென்று கடந்த சீசனில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் விதமாக இம்முறை சாம்பியன் பட்டம் வெல்ல வைத்த சி.எஸ்.கே அணியின் கேப்டன் தல தோனி ரசிகர்களை மகிழ்விக்கும் படி நான் இன்னும் சீசன் உங்களுக்காக விளையாடியிருக்கிறேன் என்று அறிவித்தார்.

ஆனாலும் இந்த முடிவு தனக்கு கடினமான ஒன்று என்றே அவர் தெரிவித்தார். ஏனெனில் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் எந்தவொரு போட்டிகளிலும் விளையாடுவதில்லை. ஐ.பி.எல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். எனவே 6-7 மாத ஓய்வுக்கு பிறகு மீண்டும் ஐ.பி.எல் தொடருக்காக தயாராவாவது அவ்வளவு எளிது கிடையாது.

Dhoni

நடப்பு 16 ஆவது ஐ.பி.எல் தொடரில் கூட முழுங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரன்னிங் ஓடுவதில் சிரமப்பட்டார். அதோடு கீப்பிங் செய்யும்போது கூட டைவ் அடிக்கையில் வலியை உணர்ந்தார். மேலும் ஒவ்வொரு போட்டி முடிந்த பின்னரும் கால் முட்டியில் ஐஸ் பேக் வைத்திருக்கும் புகைப்படங்கள் கூட வெளியாகின. அதோடு தனது முழங்காலில் காயம் உள்ளது என்னை அதிகமாக ஓட வைக்க வேண்டாம் என்று தோனியே கூட ஒரு போட்டிக்கு பின்னர் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் ஐ.பி.எல் தொடரை வென்ற கையோடு அவர் அடுத்த வாரம் மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனெனில் அவருக்கு முழங்காலில் ஏற்பட்டுள்ள காயத்திற்கான முழு பரிசோதனையை அவர் அங்கு மேற்கொள்ள உள்ளார்.

இதையும் படிங்க : ஐசிசி 2023 உலக கோப்பை அட்டவணை, மைதானங்கள் வெளியாகும் தேதி எப்போது? ஜெய் ஷா வெளியிட்ட அறிவிப்பு இதோ

அந்த பரிசோதனைக்கு பிறகு அவர் அடுத்தகட்ட சிகிச்சையையும் அங்கேயே மேற்கொள்வார் என்று தெரிகிறது. அதேபோன்று அந்த பரிசோதனையின் முடிவில் அவரது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் அவர் அந்த அறுவை சிகிச்சையை உடனடியாக செய்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement