இந்திய அணியில் தாராளமா சான்ஸ் கொடுக்கலாம் ஆனால் – புஜாராவுக்கு கிடைத்த ஜம்பாவனின் ஆதரவு

Pujara-1
- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர மூத்த அனுபவ வீரர் செட்டேஸ்வர் புஜாரா கடந்த பல வருடங்களாக இந்திய டெஸ்ட் அணியின் பேட்டிங் துறையில் முதுகெலும்பாக பல சரித்திர வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றியவர். பொறுமையின் சிகரமாய் எதிரணி பவுலர்களை களைப்படைய வைத்து ரன்களை குவிப்பதில் வல்லவரான அவர் கடந்த 2019இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து 70 வருடங்களில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி தலைமையிலான இந்தியா டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய பங்காற்றி தொடர் நாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

கடைசியாக அந்த தொடரில் சதமடித்த அவர் அதன்பின் 2 வருடங்களுக்கும் மேலாக சதமடிக்க முடியாமல் படுமோசமான பார்மில் திணறியதால் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ஒருவழியாக அதிரடியாக நீக்கப்பட்டார். ஏற்கனவே வெள்ளைப் பந்து அணியில் விளையாடாத அவர் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என்ற பெயருடன் இருந்ததால் அவரின் கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியானது.

புஜாராவின் விஸ்வரூபம்:
இருப்பினும் இந்திய அணிக்குள் மீண்டும் நுழைய ரஞ்சி கோப்பையில் விளையாடிய அவர் அதில் பெரிய ரன்களை எடுக்க தவறியதுடன் ஐபிஎல் 2022 தொடரிலும் அவரை யாரும் வாங்கவில்லை. ஆனாலும் மனம் தளராத அவர் இங்கிலாந்தின் பிரபல கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சசக்ஸ் அணிக்காக விளையாட தன்னை ஒப்பந்தம் செய்து கொண்டார். அந்த நிலைமையில் அந்த அணிக்காக முதல் போட்டியிலேயே 2 வருடங்கள் கழித்து இரட்டை சதமடித்து 201* ரன்களை குவித்த அவர் நல்ல பார்முக்கு திரும்பினார்.

Pujara County Hat Trick

அதோடு நிற்காமல் அடுத்த 3 போட்டிகளிலும் வரிசையாக சதம் அடித்த அவர் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளிலுமே முறையே 6, 201, 109, 12, 203, 16, 170* என 2 சதங்கள் 2 இரட்டை சதங்கள் என்று மொத்தம் 7 இன்னிங்ஸ்சில் 717 ரன்களை 143.40 என்ற அபாரமான சராசரியில் குவித்து முரட்டுத்தனமான பார்முக்கு திரும்பியுள்ளார். இதனால் வரும் ஜூலை 1-ஆம் தேதி இதே இங்கிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டிக்கான இந்திய அணியில் புஜாரா தேர்வு செய்யப்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

கவாஸ்கர் கருத்து:
ஜாம்பவான் ராகுல் டிராவிட் போல டெஸ்ட் போட்டிக்கு ஏற்ற அதீத பொறுமையையும் அனுபவமும் பெற்றுள்ள அவர் இந்திய அணியில் இருந்து வெளியேறுவதற்கு மோசமான பார்ம் மட்டுமே காரணமாக இருந்தது. தற்போது இழந்த பார்மை மீட்டெடுத்துள்ள புஜாரா தேர்வுக் குழுவினரின் கதவை மீண்டும் தட்டியுள்ளார். மேலும் அனுபவத்தை நம்பும் ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் கூட்டணி மீண்டும் அவரை தேர்வு செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புஜாராவுக்கு முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கரும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

gavaskar

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் அதை (5-வது டெஸ்ட்) மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். கடந்த வருடம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் மழை பெய்த போதும் நியூசிலாந்து கச்சிதமாக பயன்படுத்தி வென்றது. அந்த வகையில் புஜாராவும் இங்கிலாந்து சூழ்நிலைகளை பயன்படுத்தி அவர்களின் பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கவுன்டி சாம்பியன்ஷிப்பில் இருக்கும் பந்துவீச்சுக்கும் டெஸ்ட் பந்து வீச்சுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் என்றாலும் ஒரு பேட்ஸ்மேன் நல்ல பார்ம், ரிதமை பெற்றுவிட்ட போது ஏன் அவரை தேர்வு செய்யக்கூடாது” என்று கூறினார்.

- Advertisement -

ஸ்ட்ரைக் ரேட் முன்னேற்றம்:
சமீப காலங்களில் ஆமையை விட மெதுவாக பேட்டிங் செய்த புஜாரா 100 பந்துகளை சந்தித்து திடீரென குறைவான ரன்களில் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் அவுட்டானது பெரிய பின்னடைவை ஏற்படுத்தி வந்தது. கடைசியாக கடந்த ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்காக விளையாடிய அவர் தற்போது அதிலும் முன்னேற்றமடைந்துள்ளார். எனவே அவருக்கு தாராளமாக இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கலாம் என்று கவாஸ்கர் வலுவான ஆதரவு தெரிவித்துள்ளார்.

Pujara

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “அவர் 2 – 3 வருடங்களுக்கு பின் இந்திய அணியில் கம் பேக் கொடுக்கவில்லை. வெறும் 6 – 7 மாதங்கள் தான் ஆகின்றன. சமீபத்திய நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க தொடரின்போது இந்திய அணியில் இருந்தார். கடைசியாக ஜனவரியில் இந்திய அணியுடன் இருந்தார். எனவே அவரை தாராளமாக பிளேயிங் லெவனில் எடுத்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : இந்நேரம் அவர் மட்டும் பாகிஸ்தானில் இருந்திருந்தா நாங்க சேன்ஸ் கொடுத்திருப்போம் – இந்திய வீரர் பற்றி கம்ரான் அக்மல்

எதிரணி பவுலர்களை களைப்படைய வைத்து ஒருபுறம் விக்கெட் விழாமல் தாங்கிப் பிடிக்கும் அவர் அணிக்கு தேவையானவர். மேலும் அவரின் ஸ்ட்ரைக் ரேட்டும் இந்த கவுண்டி கிரிக்கெட்டில் முன்னேறியுள்ளது” என்று பாராட்டினார்.

Advertisement