WTCFinal : என்ன நடக்குது? கடுப்பான என்னவேனா பண்ணுவீங்களா? முகமது சிராஜை வெளுத்து வாங்கிய – சுனில் கவாஸ்கர்

Gavaskar-and-Siraj
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 7-ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது தங்களது முதல் இன்னிங்ஸ்சில் 469 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது. அதன்பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Rohit

- Advertisement -

இதன்காரணமாக ஆஸ்திரேலிய அணி 173 ரன்கள் முன்னிலையுடன் தற்போது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. அதன்படி நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் குவித்திருந்த வேளையில் இந்திய அணியை விட ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த போட்டியில் இரண்டாவது நாளில் நடைபெற்ற ஒரு சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு பேசப்படும் விடயமாக மாறியது. அந்த வகையில் இரண்டாம் நாளில் 86-வது ஓவரை வீசிய முகமது சிராஜ் மூன்றாவது பந்தை வீச வேகமாக ஓடி வந்தார். ஆனால் களத்தில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் தனது கவனக்குறைவு காரணமாக அந்த பந்தை எதிர்கொள்ளாமல் நகர்ந்து சென்றார்.

Siraj and Smith

மேலும் ஸ்பைடர் கேமரா நகர்ந்து வந்ததாலே தனக்கு கவன சிதறல் ஏற்பட்டது. அதனால் தான் நான் நகர்ந்து வந்தேன் என்று சைகை காட்டினார். ஆனாலும் அதனை ஏற்றுக் கொள்ளாத சிராஜ் வேகமாக ஓடிவந்து அவர் விலகியது தெரிந்தும் கூட பந்தை ஸ்டம்பை நோக்கி எரிந்து தனது கோபத்தினை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

அவரது இந்த செயல் குறித்து தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சுனில் கவாஸ்கர் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் கண்டித்துள்ளனர். இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் : என்ன நடக்கிறது? இது அன்றைய நாளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெலிவரி தான். முகமது சிராஜ் செய்தது கண்டிக்கத்தக்கது என கோபத்துடன் கூறினார். அதேபோன்று முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறுகையில் :

இதையும் படிங்க : WTC Final : அவர் ஒன்னும் இந்தியாவ காப்பாத்தல, 2வது இன்னிங்ஸ்லையும் அடிச்சா பாராட்டலாம் – மஞ்ரேக்கர் மனசாட்சியற்ற விமர்சனம்

பந்து வீசுவதற்கு முன்பாக விலகி செல்லும் அனைத்து உரிமையும் பேட்ஸ்மேனிற்கு இருக்கிறது. அவர் அப்படி செய்ததில் எந்த ஒரு தவறும் கிடையாது. ஒரு பேட்ஸ்மேன் பந்துவீச்சாளரை பந்து வீச வேண்டாம் என பாதியில் நிறுத்த எல்லா உரிமையும் இருக்கிறது. அப்படி இருக்கையில் சிராஜ் இப்படி செய்தது மிகவும் தவறு. முதல் இரண்டு பந்துகளில் ஸ்டீவ் ஸ்மித் பவுண்டரி அடித்ததால் கடுப்பிலேயே இது போல் அவர் நடந்து கொண்டார் என்று நினைக்கிறேன் என ரவி சாஸ்திரியும் சிராஜை கண்டித்து குறிப்பிடத்தக்கது.

Advertisement