WTC Final : அவர் ஒன்னும் இந்தியாவ காப்பாத்தல, 2வது இன்னிங்ஸ்லையும் அடிச்சா பாராட்டலாம் – மஞ்ரேக்கர் மனசாட்சியற்ற விமர்சனம்

Sanjay
- Advertisement -

இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டியில் 3வது நாள் முடிவில் 123/4 ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணி டிராவிஸ் ஹெட் 163 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் குவித்த உதவியுடன் 469 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் தொடர்ந்து பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா வழக்கம் போல ஃபைனலில் சொதப்பி வெறும் 296 ரன்களுக்கு சுருண்டது.

Thakur 51

- Advertisement -

குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா 15, கில் 13, விராட் கோலி 14, புஜாரா 14 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 71/4 என சரிந்த இந்தியாவை ரவீந்திர ஜடேஜா 48, ரகானே 89, சர்துல் தாக்கூர் 51 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் போராடி முக்கிய ரன்களை எடுத்து ஃபாலோ ஆன் அவமானத்திலிருந்து காப்பாற்றினர். அதைத்தொடர்ந்து 173 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா இதுவரை மொத்தமாக 296 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதால் இந்தியாவின் வெற்றி கடினமாகவே பார்க்கப்படுகிறது.

மனசாட்சியற்ற விமர்சனம்:
முன்னதாக இந்த போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் கைவிட்ட நிலையில் சில நோ-பால், கேட்ச் அதிர்ஷ்டத்தை பொன்னாக மாற்றும் அளவுக்கு சிறப்பாக பேட்டிங் செய்த அஜிங்க்ய ரகானே குறைந்தபட்சம் தாக்கூருடன் இணைந்து இந்தியாவை இன்னிங்ஸ் தோல்வி சந்திப்பதிலிருந்து காப்பாற்றியுள்ளார். குறிப்பாக கடந்த 10 வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்பட்டு சில மறக்க முடியாத வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் கடந்த சில வருடங்களாக சதமடிக்காமல் தவித்ததால் கடந்த பிப்ரவரியுடன் கழற்றி விடப்பட்டார்.

Rahane 1

அதனால் கேரியர் முடிந்ததாக கருதப்பட்டாலும் சமீபத்திய ரஞ்சிக் கோப்பை மற்றும் ஐபிஎல் தொடரில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி ஃபார்முக்கு திரும்பி இப்போட்டியில் தேர்வான அவர் இந்தியாவை ஓரளவு காப்பாற்றி 18 மாதங்கள் கழித்து சிறந்த கம்பேக் கொடுத்துள்ளார். இந்நிலையில் ரகானே ஒன்றும் ஆபத்தான சமயத்தில் இந்தியாவை காப்பாற்றுபவர் அல்ல என்று தெரிவிக்கும் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் இதே போட்டியில் 2வது இன்னிங்சிலும் சிறப்பாக செயல்பட்டு ட்ரா அல்லது வெற்றி பெறுவதற்கு உதவினால் பாராட்டலாம் என கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நெருக்கடியான சமயத்தில் அசத்தக்கூடிய பேட்ஸ்மேன் என்று ரகானே அழைப்பதற்கு தகுதியானவர் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் இதே போட்டியில் இன்னும் ஒரு இன்னிங்ஸ் இருக்கிறது. நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு காப்பாற்றுபவர் என்றால் இந்த போட்டியை டிரா அல்லது வெற்றிகரமாக முடிக்க வேண்டும். ஆனால் இந்த இன்னிங்ஸ் முரண்பாடுகள் மற்றும் அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் அவர் அற்புதமாக செயல்பட்டுள்ளார்”

Sanjay

“அவரை நெருக்கடியான நேரத்தில் அசத்தும் வீரர் என்று சொல்ல முடியாது. ஏனெனில் அவர் வித்தியாசமான இன்னிங்ஸ் விளையாடினார். மேலும் பழைய ரகானே இந்த ஸ்கோரையும் தாண்டி அடித்திருப்பார். இருப்பினும் யாருக்குத் தெரியும் இந்த புதிய 2.0 ரகானே 2வது இன்னிங்ஸிலும் இதை விட சிறப்பாக போட்டியை கொண்டு செல்லலாம்” என்று கூறினார். முன்னதாக 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 36க்கு ஆல் அவுட்டான பின் விராட் கோலி நாடு திரும்பிய போது கேப்டனாக பொறுப்பேற்ற ரகானே மிகப்பெரிய நெருக்கடி நிறைந்த 2வது போட்டியில் சதமடித்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு திருப்பினார்.

இதையும் படிங்க:WTCFinal : டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரராக உச்சம் தொட்டு வரலாறு படைத்த ஜடேஜா – அப்படி என்ன சாதனை தெரியுமா?

அத்துடன் அடுத்தடுத்த போட்டிகளில் பும்ரா, அஸ்வின் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் காயத்தால் ஏற்பட்ட நெருக்கடியை இளம் வீரர்களை வைத்து சமாளித்த அவர் காபாவில் வெற்றி வாகை சூடி 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலிய மண்ணில் மீண்டும் கோப்பையை வெல்ல உதவினார். அப்படி பெரும்பாலான நெருக்கடியான சமயங்களில் அசத்தும் ரகானேவை பாராட்டவில்லை என்றாலும் இப்படி சஞ்சய் மஞ்ரேக்கர் மனசாட்சியின்றி விமர்சிப்பது இந்திய ரசிகர்களிடம் அதிருப்தி ஏற்ப்படுத்தியுள்ளது.

Advertisement