WTCFinal : டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரராக உச்சம் தொட்டு வரலாறு படைத்த ஜடேஜா – அப்படி என்ன சாதனை தெரியுமா?

Jadeja
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா கடந்த 2012-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 64 போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார். இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் விளையாடி வரும் அவர் தனது 65-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார்.

Jadeja 2

- Advertisement -

அதன்படி ஜூன் 7-ம் தேதி துவங்கிய இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணியில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் மட்டுமே இடம்பெறுவார்கள் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பேட்டிங்கில் பெரிதளவு கை கொடுக்கும் வீரராக திகழும் ஜடேஜா இந்த போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வெல்ல மிக முக்கியமான காரணமாக இருந்தது ஜடேஜா இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியிலும் மிக முக்கிய வீரராக பார்க்கப்படுகிறார்.

Jadeja 1

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடியை பின்னுக்கு தள்ளி ஜடேஜா மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்த ஜடேஜா இரண்டாவது இன்னிங்சில் இதுவரை இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்தியதன் மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 267 விக்கெட்டுகளை எடுத்து பிஷன் சிங் பேடியின் சாதனையை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

இதையும் படிங்க : WTC Final : ரகானேவின் டெக்னிக் சரில்ல, அதிர்ஷ்டத்துல அடிச்சுட்டாரு – விமர்சித்த முன்னாள் இந்திய வீரரை கலாய்க்கும் ரசிகர்கள்

அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்த இடதுகை சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையில் முதலிடத்தில் இருந்த பிஷன் சிங் பேடியை (266) தற்போது ஜடேஜா பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறி வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement