இது லீகல் கிடையாது, ஐசிசி கவனிக்க வேண்டும் – வெஸ்ட்இண்டிஸ் வீரர் மீது கவாஸ்கர் குற்றசாட்டு

Gavaskar
- Advertisement -

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றி ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா ஒயிட்வாஷ் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.

INDvsWI

- Advertisement -

அதை தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதி வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் உலகப் புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1 – 0* என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

கலக்கும் இந்தியா:
இதை தொடர்ந்து கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்தியாவிற்கு இசான் கிசான் 2 ரன்களில் அவுட்டாக கேப்டன் ரோகித் சர்மா 19 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்கள். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 8 ரன்களில் அவுட் ஆனதால் 72/3 என ஓரளவு சுமாரான தொடக்கத்தை இந்தியா பெற்றது.

Pooran

இருப்பினும் மறுபுறம் பொறுப்புடன் பேட்டிங் செய்த முன்னாள் கேப்டன் விராட் கோலி 45 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உட்பட அரைசதம் அடித்து 52 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் கடைசி நேரத்தில் அதிரடியாக பேட்டிங் செய்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் வெறும் 28 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உட்பட 52 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவருடன் வெங்கடேஷ் ஐயர் 18 பந்துகளில் 33 ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் இந்தியா 186/5 ரன்களை எடுத்தது.

- Advertisement -

சர்ச்சையில் வெஸ்ட்இண்டீஸ் வீரர்:
இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக சுழல் பந்துவீச்சாளர் ராஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இருப்பினும் இந்த போட்டி மட்டுமல்லாது இந்த தொடரின் முதல் போட்டியிலும் அவர் தனது இடது கையில் கருப்பு நிற வண்ணமுடைய கட்டு கட்டியது போல டேப் சுற்றியிருந்தது தற்போது கேள்வியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

chase

இது போன்ற டேப் பயன்படுத்திக் கட்டப்படும் கட்டுகள் அனுமதிக்கப்படுகிறதா என்று இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி வர்ணனை செய்து கொண்டிருந்த சுனில் கவாஸ்கர் பேசியது பின்வருமாறு. “என்ன அது, அவர் கையுறை அணிந்திருக்கிறாரா? இது விதிமுறைக்கு உட்பட்டதா? அது பேன்டேஜா அல்லது என்ன இது? இது போன்றவைகளை சமீப கால கிரிக்கெட்டில் பார்த்தது கிடையாது. இன்று நிறைய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அதை அணிந்துள்ளார்கள். ஆனால் இதுபோல விரல்களில் பல வீரர்கள் அணிந்திருப்பதை பார்த்துள்ளேன். அது விரல்களை காயத்தில் இருந்து காப்பதற்காக என்பது எனக்கு தெரியும். ஆனால் இவர் உள்ளங்கையில் அணிந்திருக்கிறார்” என கேள்வியை எழுப்பினார்.

- Advertisement -

ஐசிசி கவனிக்குமா:
அதற்கு பதில் அளித்த மற்றொரு முன்னாள் இந்திய வீரர் தீப் தாஸ் குப்தா பேசியது பின்வருமாறு. “இது கைகளை சற்று அதிகப்படியாக பாதுகாக்க பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற கட்டுகளை பயன்படுத்துவதால் லேசான காயத்தில் இருந்து எளிதாக தப்பலாம்” என கூறினார்.

Sunil Gavaskar

ஆனால் அதற்கு சமாதானம் ஆகாத சுனில் கவாஸ்கர் கேட்ச் பிடிக்கும் போது அதிகப்படியான உறுதியை பெறுவதற்காக இதுபோன்ற கட்டுகளை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார். இதுபற்றி அவர் கூறியது பின்வருமாறு. “கேட்ச் பிடிக்கும் தருணத்தில் இதுபோன்ற கட்டுகள் அதிகப்படியான உதவிகளை செய்யும். சமீப காலங்களாக இது தொடர் கதையாகி விட்டது. நிறைய வீரர்கள் இதை பயன்படுத்துகிறார்கள். பாதுகாப்புக்காக கூட இதை பயன்படுத்தக்கூடாது. தற்போது நிறைய விதிமுறைகள் மாறிவிட்டதால் இதை ஏற்றுக் கொள்ளலாம்” என தெரிவித்த அவர் இது போன்ற கட்டுகளை விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் வீரர்கள் பயன்படுத்துகிறார்களா என்பதை ஐசிசி கவனிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

அவர் கூறுவது ஒரு வகை நியாயம் என்றே கருத வேண்டும். ஏனெனில் இரவு நேர போட்டிகளில் பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கேட்ச்களை தரமான வீரர்கள் கூட நிறைய முறை கேட்ச்களை கோட்டை விட்டதை பார்த்தோம். அதைத் தடுப்பதற்காக தான் சமீப காலங்களாக இதுபோன்ற கட்டுகளை சில கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

இதையும் படிங்க : இதுக்கு பருத்தி மூட்ட குடோன்லயே இருக்கலாம் – ஐபிஎல் 2022 ஏலத்தில் நிகழ்ந்த 3 தவறான முடிவுகள்

இருப்பினும் இயற்கையாக வெறும் கையை பயன்படுத்தி கேட்ச்களை பிடிப்பதே உண்மையான விளையாட்டு என்பதால் இது போன்றவற்றை வீரர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என சுனில் கவாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement