
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபியை இந்திய கிரிக்கெட் அணி 12 வருடங்கள் கழித்து வென்ற மாபெரும் சாதனை படைத்துள்ளது. பாகிஸ்தானில் நடைபெற்ற அந்தத் தொடரில் தங்களது போட்டிகளை துபாயில் விளையாடிய இந்தியா தோல்வியை சந்திக்காமல் கோப்பையை வென்றது. குறிப்பாக லீக் சுற்றில் வங்கதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்து தோற்கடித்த இந்தியா செமி ஃபைனலில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தது.
இறுதியில் மார்ச் 9ஆம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் வலுவான நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. அதனால் 2002, 2013,க்குப்பின் 3வது முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வென்று இந்தியா உலக சாதனை படைத்துள்ளது. அந்த வெற்றி இந்திய ரசிகர்களிடம் மிகப்பெரிய உற்சாகத்தையும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக துபாயில் அந்தப் போட்டியை முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் நேரலையில் வர்ணனை செய்தார். அங்கே போட்டி முடிந்தவுடன் இந்திய அணி கோப்பையை பெற்று மைதானத்தில் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது அவர் ஓரமாக நடனமாடி சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடினார். 75 வயதாகும் அவர் இந்தியாவின் வெற்றியால் தம்முடைய வயதை மறைந்து குழந்தையைப் போல் தேசத்தின் வெற்றியைக் கொண்டாடினார்.
அப்போது யார் இவர் கொண்டாடுவதை நிறுத்துவார். என்று தொகுப்பாளர் கேட்டார். அதற்கு யாரும் நிறுத்தாதீர்கள் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானான கவாஸ்கர் இந்தப் பொன்னான தருணத்தை கொண்டாடட்டும் என்று ஹர்பஜன் சிங் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் அவரைப் பார்த்து தான் நாம் அனைவரும் கிரிக்கெட்டில் விளையாடத் துவங்கினோம் என்றும் அவருக்கு ஹர்பஜன் மரியாதையும் செலுத்தினார்.
அவர் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது ஒரு புறமிருக்க இந்திய அணியினர் கோப்பையை வென்ற பின் மைதானத்தை வலம் வந்து கொண்டாடினர். அப்போது முகமது ஷமி தனது குடும்பத்தினரை களத்திற்குள் அழைத்து வந்தார். அங்கே அவர்களை சந்தித்த விராட் கோலி ஷமியின் அம்மா காலில் விழுந்து சிரித்த முகத்துடன் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டார்.
இதையும் படிங்க: ஒருநாள் போட்டிகளில் இருந்து ரிட்டயர்மென்ட் எப்போது? நெத்தியடி பதிலை கூடிய – கேப்டன் ரோஹித்
பின்னர் அவர்களுடன் இணைந்து புகைப்படத்தையும் விராட் கோலி எடுத்துக் கொண்டார். அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் சக வீரரின் அம்மா காலில் பாகுபாடு இல்லாமல் எழுந்து வாங்கிய விராட் கோலியின் மனதை பாராட்டி வருகிறார்கள். அவருடைய செயல் ரசிகர்களின் நெஞ்சை தொடுவதாக அமைகிறது.